வணிக ஆள்முறை இயல் நிறைஞர் பட்டம்பெற்ற காயலர் ஐவர்


  தமிழகத் தலைநகர் சென்னையில் Muslim Educational Association of South India (MEASI ) என்னும் கல்விச் சங்கம் இயங்குகிறது . இதன் கீழ் Measi Institute of Management மற்றும் The New College ( புதுக் கல்லூரி) ஆகிய கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன .   சென்னை ராயப்பேட்டையில் இக்கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகத்தில், Measi Institute of Management கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா, Haji Anaikar Abdul shukoor அரங்கில், 17-02-2015 செவ்வாய்க் கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது .   இந்நிகழ்ச்சியில், 2012-2014 கல்வியாண்டில் MBA மற்றும் MCA வகுப்பில் பயின்ற மாணவ. மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது .   இவ்விழாவில் , MEASI யின் தலைவர் ஜனாப் முஹம்மது கலீலுல்லாஹ் , நிர்வாக இயக்குனர் A. முஹம்மது அசரபு மற்றும் கல்லூரி நிர்வாகிகள் , துறைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர் .   இச்சிறப்புமிகு விழாவில் , நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைக்குரிய, சென்னைப் பல்கலைக் கழகத்தின் Examination Controller Dr. S. திருமகன் M.Sc.,M.Phil., M.B.A., M.A., Ph.D., தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கி, பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்தினார் . முன்னதாக , இயக்குனர் Dr. நிஜார் அஹமது M.A., M.COM., M.SC., M.Ed., M.S., M.L.M. M.B.A., M.L., M.Phil., Ph.D.,அவர்கள் வருகைப் புரிந்தோரை வரவேற்று , சிறப்பு விருந்தினர் Dr.S. திருமகன் அவர்கள் குறித்த அறிமுகத்தை நிகழ்த்தினார் .  

S.A.SYED MAHSOOQ RAHMAN B.COM.,M.B.A., S/O M.A.K. SYED AHAMED, SEASHORE STREET, KAYALPATNAM

 

M.N.A.SEYED ISMAIL B.E., M.B.A., S/O S.E.MOHAMED NOOHU AMANULLAH, NAINAR STREET , KAYALPATNAM

W.A.H . SEYED ABDUR RAHMAN B.I.S.M., M.B.A., S/O WAVOO S.A.R. ABUL HASSAN, ARAMPALLI STREET, KAYALPATNAM

A.SIRAJUDEEN B.COM., M.B.A., S/O K.M.A. ABDUL KADER , Quaid - e - Millath Nagar ,(K.M.T. Street) , KAYALPATNAM

M.W. ABDUL KADER B.COM ., M.B.A., S/O M.A.MUTHU WAPPA , PARIMAR STREET, KAYALPATNAM

ஆகிய காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஐவர், இப்பட்டமளிப்பு விழாவில் வணிக ஆள்முறை இயல் நிறைஞர் -Master Of Bussiness Administration ( MBA) பட்டத்தினைப் பெற்றனர் .   முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுள்ள காயல் நகரைச் சார்ந்த இப்பட்டத்தாரிகளும், இவர்களோடு பட்டம் பெற்ற அனைவரும் வருங்காலத்தில் அனைத்து நிலைகளிலும் முதலிடம் பெற்றுத் திகழ, இதயமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு , எல்லாம் வல்ல இறைவனை உள்ளார இறைஞ்சுகிறோம் .

இவர்களுக்கான வாழ்த்துகளைப் பதியவும் – வாழ்த்துகளைக் காணவும்