கவிதை மேடை

அழகிய முன்மாதிரி

கவிஞர் எஸ்.ஏ. நெய்னா, காயல்பட்டினம். 

விதவைகள் இருளுக்கெல்லாம்

விடி கதிரோனாய்

வியர்வை தரு மேனிக்கெல்லாம்

வீசிடுங் காற்றாய்

கவிதை தரு நெஞ்சத்திலெல்லாம்

காவிய ஊற்றாய்

கருணைக் கொண்ட இறைவன் தந்த

அருளின் பாட்டாய்

பொய்மையைப் பொசுக்க வந்த

புதுச் சூரியனாய்

கயமைக் கருக்க வந்த

கடமைக் கனவாய்

வாய்மையைப் பொழிய வந்த

வற்றாத மழை மேகமாய்

இப்புவிதனில் வந்த அமுதம்

புண்ணிய மணம் தந்த குமுதம்

வானம் வாழ்த்துகின்ற வசந்தம்

ஞாலம் போற்றுகின்ற சுகந்தம்

அழகிய முன்மாதிரி

வேறு யாருண்டு இவர் மாதிரி என

அகிலம் புகழும் அண்ணலாரின்

மகிமை சொல்வோம் மனம் நிறைவோம்.


( 25-01-2013 )