கவிதை மேடை

அறிவின் வெளிச்சத்தில் ஆன்மீகம்!

கவிஞர் - ஈரோடு தமிழன்பன்


பள்ளிவாசலில் இருப்பது போலவே

கலப்படம்
நடக்காத கடைகளில்,

பெற்றோர்களை மதிக்கும்
பிள்ளைகள் கண்களில்,

கல்விக் கூடங்களில், கரும்பலகைகளில்,
 
நியாயங்களைக்
கைது செய்யாத காவல் நிலையங்களில்,
 
நீதி தேவதையின்
தராசு முள்ளில்,

வாழ்க்கையின்
ஒவ்வொரு அத்தியாயத்திலும்
சந்தன வடுவாக –மார்க்கத்தை
மணக்கும்படி அழுத்தி வைத்தவர்
முஹம்மது நபி!

மனிதனை விடுதலை செய்த
மாநபி...
அறிவின் வெளிச்சத்தில்
ஆன்மீகத்தை அறிமுகம் செய்து வைத்தார்!

பகலைப் போலப் புரிகிறது
மார்க்கம்!

பனியைப் போல இதமாகிறது
வாழ்வுநெறி!

மனிதரில் மனிதர் -மாமனிதர்
முஹம்மது நபி!

எவருக்கும் எட்டும் இடத்தில்
இருப்பவர் நபி!

எட்டாத பொருளை
எடுத்துக் கொடுக்கும் இடத்தில்
இருப்பவரும் அவரே!

( 23-11-2012 )