Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
11:41 am
Wednesday, 30 September 2020
Top

காயலில் கடையடைப்பு ஆர்ப்பாட்டம்



காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் அமைந்திருப்பது DCW சுமார் 45ஆண்டுகளுக்கு முன்பாக, நமதூர் மக்களின் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, குஜராத்தின் ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இத்தொழிற்சாலையை நிறுவினார்கள்.

துவக்க காலத்திலிருந்து இன்று வரை, நமதூர் மக்களில் ஒருசிலர் மட்டுமேவேலை வாய்ப்பினைப் பெற்றார்களே தவிர, பெருமளவு இந்த ஆலையால் இவ்வூர் பயனனடையவில்லை.

உருவாகப் போகும் ஆபத்தை அறியாத நம்முன்னோர்கள் வழங்கிய நிலத்தில், உருவான இந்த ஆலை இவ்வூருக்கு நோய்களையே பரிசாகத் தந்துள்ளது.

நமது காயல் உள்ளிட்ட தமிழகத்தின் எப்பகுதி மக்களுக்கும், அன்றாடம் பயன் தரும் எப்பொருளையும் உற்பத்தி செய்யாது, வடநாட்டின் தேவைக்கு பயன்படும் வேதியல் (இரசாயனம்) பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்து இந்த ஆலை அனுப்பி வைக்கிறது.

இந்த ஆலையின் மூலம் வெளியாகும் அமிலக்கழிவு, கடலிலும், கால்நடைகள் பருகும் நீர்நிலைகளிலும், வயல் வெளிகளிலும் ஊடுருவிக் கலப்பதினால் வாழும் மனிதர்களுக்கும், வாயில்லா ஜீவன்களாகிய கால்நடைகளுக்கும் பெரும் பாதிப்பை உருவாக்கி வருகிறது.

இப்பாதிப்பு உப்பளங்களையும் விட்டுவைக்கவில்லை. வெளியாகும் நச்சுப்புகை காற்றில் கலந்து, நம் சுவாசத்தில் இணைந்து பல்வேறு பிணிகளை உருவாக்குகிறது.

சுற்றுப்புறத்தை முற்றிலும் நாசப்படுத்தும் இவ்வாலை நிர்வாகம், அரசு விதிகளையோ, வழிகாட்டும் நெறிகளையோ சிறிதளவும் பின்பற்றாமல், அவ்வப்போது எழும் கண்டனங்களையும் கருத்தில் கொள்ளாமல் செயல்படுவதைக் கண்டித்தும், அரசின் கவனத்தை ஈர்த்திடவும் காயல்பட்டினத்தில் 29.11.2012 வியாழக்கிழமை அன்று கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைபெற்றன.

காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அனத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து, பால் கடைகள், அரசு அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள், போக்குவரத்து ஆகியவைகளுக்கு முழு அடைப்பில் விதிவிலக்கு வழங்கப்பட்டிருந்தன.

மாலையில் நமதூர் முதன்மைச்சாலையில் (மெயின் ரோடு) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஹாஜி ஏ.ஆர்.இக்பால் தலைமை ஏற்றார். kayalconnection.com ஆலோசகர் ஹாஜி எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ், பொதுநல ஆர்வலர் ஹாஜி பக்ரீன் ஆகியோர்; முன்னிலை ஏற்றார்கள். ஆலைக்கெதிரான கண்டக் குரல்கள் எழுப்பப்பட்டன.

கடையக்குடி மற்றும் கற்புடையார் வட்டம் பகுதிகளில் மீன் பிடித் தொழில் செய்து வருகின்ற மீனவர்களும்; திரளான காயலர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இரவு நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக் கூட்டத்திற்கு ஹாஜி ஏ.கே.கலீல் தலைமை ஏற்றார்.  ஹாஜி
டி.ஏ.எஸ்.அபூபக்கர், ஹாஜி என்.எஸ்.ஈ.மஹ்மூது, ஹாஜி மக்கி நூகுத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களாகிய ஜனாப் நிஜாமுத்தீன் மற்றும் திரு. அருட்செல்வன் ஆகியோரின் சிறப்புரையுடன் மற்றும் பலரின் உரைகளும் இடம்பெற்றன.

நகரின் அனைத்து ஜமாஅத்துகள் – பொதுநல அமைப்புகள் – புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் – நகர்மன்ற அங்கத்தினர் – வேன் – கார் – ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் – அமைப்பு
சாரா நிறுவனத்தினர் – அமைப்பு சாரா வாகன ஓட்டுநர்கள் ஆகிய அமைப்புக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும்,

காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு இப்போராட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராகவும் குறிப்பிட்டு பிரசுரம் வெளியிடப்பட்டு, நகரெங்கும் சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தன.

நல்லவைகள் விளையும் என நம்புவோம்.

நிழற்படம் மற்றும் செய்தித் தொகுப்பு :
முதன்மைச் செய்தியாளர், kayalconnection.com

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


5 Comments to “காயலில் கடையடைப்பு ஆர்ப்பாட்டம்”

  1. mackie noohuthambi  , India    IP : 117 .  .  . 
    says:

    DCW என்பது DEATH CREATING WORKSHOP என்ற பாணியில் தன் தொழிலை முன்னெடுத்து செல்கிறது. ஒரு காலத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஒரு தொழிற்சாலையாக உருவாகி, ஓங்கி, உயர்ந்து, வளர்ந்த பிறகு,சாவுபுரமாக அது இன்று மாறிவிட்டது வேதனை தருகிறது.
    YOUR FREEDOM ENDS WHERE MY NOSE BEGINS..என்று ஆங்கிலத்திலே சொல்வார்கள். ‘உனக்கு சுதந்திரம் உள்ளது, எனது மூக்கை உனது கை தொடும் வரை.’ எங்களை உங்கள் தலைமேல் ஏற்றி வையுங்கள் என்று சொல்லவில்லை. எங்கள் தலை மீது நீங்கள் ஏறாமல் இருங்கள் என்று சொல்லத்தான் இந்த போராட்டம்….. தொடரும்.

  2. A.S.L.SULAIMAN LEBBAI - RIYADH - S.ARABIA  , Saudi Arabia    IP : 37 .  .  . 
    says:

    செய்திகளை மிகவும் தெளிவாகவும், விளக்கமாகவும் தந்து உள்ளீர்கள். இன்னும் நிறைய செய்திகளை தினமும் நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

    Admin: தங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி. இன்னும் சில தினங்களில் செய்திகள் அணிவகுக்கும். இன்ஷாஅல்லாஹ்.

  3. ஹைதுரூஸ் ஆதில்  , India    IP : 122 .  .  . 
    says:

    அட்மின் அவர்களே,

    சின்ன செய்தியானாலும் பெரிய விஷயங்களை பளிச்சிட செய்துள்ளீர்கள்.
    போட்டோக்களும் அருமையாக உள்ளது.
    வாழ்த்துக்கள். இது போலுள்ள செய்திகளை சுடச்சுட வழங்க முயற்சிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

    ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.

  4. Mohamed Salih  , India    IP : 121 .  .  . 
    says:

    கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் … குறிப்பாக சின்ன சிறு சிறார்களை பார்க்கும் போது, நிச்சயமாக DCW ஆலை மூடும் வரை, நமது வருங்கால சந்ததிகள் உறு துணையாக இருப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் …

    Special thanks to News editor. The way you of published the news is very nice and good photo also …

    பெங்களூரில் இருந்து ,
    முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்

  5. Vilack SMA  , Vietnam    IP : 14 .  .  . 
    says:

    Protest against DCW highly appreciated. Insha Allah, we will get favourable solution to save our town.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

Leave a Reply to mackie noohuthambi

Copyright 2019 © kayalconnection.com