Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
11:03 am
Wednesday, 30 September 2020
Top

ஐக்கியப் பேரவையின் தீர்மானங்களும், அறிக்கையும்



ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் 19-12-2012 காலை 10 மணிக்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள்  பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தீர்மானங்கள் 

எண்.1

நகரில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், மேற்படி நிலத்தை முஸ்லிம் ஐக்கிய பேரவை தெரிவு செய்து தரும்படியாக, நமது நகர்மன்ற துணைத்தலைவர் உள்பட உறுப்பினர்கள் 18 பேர்களும் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை நகர்மன்ற உறுப்பினர்கள் 13 பேர்கள் சென்ற 05-12-2012ம் தேதி பேரவைக்கு நேரில் வந்து அளித்தார்கள்.

மேற்படி மனுவை இக்கூட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, ஐந்து ஏக்கர் நிலத்தை பேரவையின் மூலம் தெரிவு செய்து கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது.

எண்.2

தேவைப்படுகின்ற நிலத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் ஒரு இலட்சம் மட்டுமே.
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நகராட்சியின் தலைவரும், வாவுவஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனத்தலைவருமான, பேரவையின் கௌரவ ஆலோசனை குழு உறுப்பினர் மரியாதைக்குரிய அல்-ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள், நமதூர் கடையக்குடி பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் பேரவையின் வேண்டுகோளை ஏற்று, தேவைப்படுகின்ற ஐந்து ஏக்கர் நிலத்தை, அரசு நிர்ணயித்த விலைக்கே தருவதாக ஒப்புக்கொண்டு அறிவிப்பு செய்ததை இக்கூட்டம் தக்பீர் முழக்கதுடன் வரவேற்று, அவர்களுக்கு ஊர் மக்களின் சார்பாக இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.

எண்.3

கொட்டப்படும் குப்பைகளிலிருந்து எந்திரங்கள் மூலம் எரிவாயு தயாரிப்பதற்கு நமது நகராட்சிக்கு தமிழக அரசு ரூபாய் தொன்னூறு இலட்சம் ஒதிக்கீடு செய்துள்ளது.
மேற்படி குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்ற எரிவாயுவால் சுற்றுச்சூழல் மாசுபடுமா? மக்கள் நலம் பாதிக்கப்படுமா? என்பன போன்ற விளக்கங்களை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரி மூலமாக தெரிந்து கொள்ளவும், பயோ எரிவாயு தயாரிக்கப்படுகின்ற ஆலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதற்கும், பேரவையால் ஐந்து பேர்கள் கொண்ட ஒரு குழுவை அனுப்பி வைப்பதென முடிவு செய்யப்பட்டது.


அறிக்கை:

வருந்துகிறோம், பிராத்திக்கிறோம்

நாடறிந்த நாவலர், நல்ல தமிழ் பேச்சாளர், அண்ணல் பெருமானார் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களின் அமுத மொழிகளை, ஆய்வு செய்து, அதற்குரிய கருத்துக்களை விளக்கமாகவும், விரிவாகவும் சொல்லுகின்ற ஆற்றல் பெற்றவர்.
இவர்தம் பேச்சு நடை நீர் அலையை வருடிச்செல்லும் தென்றலாய் இனிக்கும். கொடுக்கும் தலைப்பு இவரது இதழ் சிந்தும் அழகு தமிழ் சொற்களால் ஜொலிக்கும்.
அரபு நாடுகள், ஹங்காங், பேங்காக், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புருனை நாடுகளில் இவர்தம் சன்மார்க்கப் பிரச்சாரத்தால் பயன் பெற்றோர் பல்லாயிரம்.
எண்ணற்ற மார்க்க அறிஞர்களை உருவாக்கி சமுதாயத்திற்களித்த சன்மார்க்கப் போதகர்.

தமிழக ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தலைவரும், காயல்பட்டணம் மஹ்லரா அரபிக்கல்லுரியின் முதல்வருமான மரியாதைக்குரிய மெளலானா மெளலவி அல்-ஹாஜ் எஸ்.எஸ். கலந்தர் மஸ்தான் ஆலிம், ரஹ்மானி, காதிரி அவர்கள் சென்ற 20-12-2012 வியாழக்கிழமை அன்று வஃபாத்தாகி விட்டார்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மறு நாள் காலை 09:15 மணியளவில் அன்னாரது ஜனாஸா சொந்த ஊரான கடையநல்லுரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வல்லிறையேகன் ஆலிம் பெருந்தகை அவர்கள், மாண்புயர் மார்க்கத்திற்காக ஆற்றிய பணிகளை ஏற்று, பிழைகளைப் பொறுத்து மேலான சுவனத்தைக் கொடுத்தருள்வானாக ஆமின்.
தகுதிவாய்ந்த முதல்வரை, குடும்பத்தலைவரை, இழந்து வருந்தும் மஹ்லரா அரபிக்கல்லூரியின் நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அன்னாரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,
தலைவர் மற்றும் நிர்வாகிகள்.
தகவல்: ஐக்கியப் பேரவை நிர்வாகம்.

நிழற்படம்: முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


5 Comments to “ஐக்கியப் பேரவையின் தீர்மானங்களும், அறிக்கையும்”

  1. m.s.siddik  , India    IP : 112 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    நகரின் குப்பைகளை கொட்டுவதற்கு, அரசு நிர்ணய விலையில் இடம் கிடைப்பதற்கு, ஐக்கிய பேரவையில் கோரிக்கை வைத்த நகர்மன்ற துணை தலைவர் உள்பட பதினெட்டு நகர்மன்ற உறுப்பினர்களுக்கும், ஊருக்காக முயற்சி செய்த ஐக்கிய பேரவைக்கும், பெரிய மனதோடு நிலம் வழங்கிய வாவு செய்யத் அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
    இந்த பெரிய மனதுள்ள மனிதரின் ஆயுளை அல்லாஹ் நீளமாக்கி சரீர சுகத்தையும் கொடுத்தருள்வானாக. ஆமீன்
    காயல்பட்டணம் ஊரின் நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனையில், ஐக்கியப்பேரவையின் முயற்சியால், கொண்டுவரப்பட்ட துணை மின் நிலையம், இப்போது நகரின் குப்பை கொட்ட ஐந்து ஏக்கர் நிலம், இப்படியாக இன்னும் தொடரும் சாதனைகள்.
    ஊரின் நன்மைக்காக, எந்தவித சுயநலமும், சுயவிருப்பு, வெறுப்புமில்லாமல், செயல்படும் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் சாதனைகள் தொடர வாழ்த்துகிறேன்.

  2. MOHIDEEN ABDUL KADER  , United Arab Emirates    IP : 2 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று , தாராள மனப்பான்மையுடன், காயல்மக்களுக்காக, வழக்கம் போல், இப்போதும் பொது நலன் கருதி, கொடைவழங்கிய வாவு குடும்பத்தின் ஓர் மாமனிதர், முன்னால் தலைவர் மதிப்பிற்குரிய ஹாஜி செய்து அப்துர்ரஹ்மான் அவர்களுக்கும், காயலை வழிநடத்தும்பேரவை பெரியோர்களுக்கும் நன்றி
    பெரியோர்களே! தங்களின் ஆலோசனை மற்றும் வழிநடத்தும் திறமைஇவை களின் துணை கொண்டு இன்னும் அதிகமான முழு ஈடுபாட்டுடன், தற்போது நகர்மன்றத்தில் நிலவும் பலப் பிரச்சனைகளை யும் தீர்க்க முயலுங்கள் அது தாங்களால் மட்டும் தான் முடியும்.

    அந்நாளை எதிர்நோக்கியவனாக….
    அபுதாபியில் இருந்து , என்றும் அன்புடன், முகியதீன் அப்துல் காதர்.

  3. NUSKI MOHAMED EESA LEBBAI  , Saudi Arabia    IP : 146 .  .  . 
    says:

    ஆர்பாட்டமில்லாமல் நமதூருக்கு நல்ல சேவை ஆற்றி வரும் ஐக்கிய பேரவை இன் மகத்தான பணிக்கு மகிழ்வுடன் வாழ்த்து தெரிவிக்கிறோம்.நிலம் வழங்கிய ஹாஜி வாவு அப்துல் ரஹ்மான் அவர்களையும் மனமார வாழ்த்துகிறோம். மக்கள் சேவை தொடரட்டும்.

    M.E.L.நுஸ்கி மற்றும் ரியாத் வாழ் காயலர்கள். ரியாத் – சவுதி அரேபியா

  4. S. Mohamed  , Saudi Arabia    IP : 88 .  .  . 
    says:

    வாழ்த்துகள். உங்கள் பணி செவ்வனே தொடரட்டும்.

  5. shaikacader  , India    IP : 117 .  .  . 
    says:

    CONDOLENCE

    Assalamu alaikum wrwb.

    INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

    May Allah forgive his sins, accept his good deeds and give him a place in Jannathul Firdous.
    I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
    அஸ்ஸலாமு அலைக்கும்

    بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
    _
    نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

    4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

    20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

    20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

    எல்லாம் வல்ல அல்லாஹ், அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .
    அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் – உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
    Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

Leave a Reply to MOHIDEEN ABDUL KADER

Copyright 2019 © kayalconnection.com