நமதூர் பைபாஸ் ரோடு உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். கொத்தனார் தொழில் புரியும் இவரது 12 வயது மகன் கார்த்திக்; இன்று காலை பட்டம் பறக்க விட்டபோது, பட்டம் அருகிலுள்ள மின்சார கம்பியில் மாட்டிக் கொண்டது.
அதனை எடுக்க மின்கம்பத்தில் ஏறி முயற்சி செய்தபோது, மின்சாரம் தாக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளானான்.
உடனடியாக நமது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு, அரசு ஆம்புலன்ஸில் (108) அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.
நகர்மன்ற உறுப்பினர் அல்ஹாஜ் Ln எஸ்.ஏ. சாமு சிகாபுத்தீன் விபத்து நடந்த சிறுவன் இல்லத்திற்கு சென்று, மேல்சிகிச்சைக்கு சிறுவனை அனுப்பி வைக்க உறுதுணை புரிந்தார்.
உரிய சிகிச்சை பெற்று உடல்நலம் பெற்றேக, மனித நேயத்தோடு இறைவனை வேண்டுவோம்.
இச்செய்தியின் மூலமாக நமது இளைஞர்களை பேணி பாதுகாக்க பாடம் பெறுவோம்.
நிழற்படம் மற்றும் தகவல் உதவி: முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com