காயல்பட்டினம் BSNL அலுவலக இணைப் பொறியாளர் வழங்கியுள்ளத் தகவல்:
27.10.2018. சனிக்கிழமை காலை 11 மணியளவில், காயல்பட்டினம் மெயின் ரோடு – ஹாஜியப்பா தைக்கா பள்ளி எதிரிலுள்ள துஃபைல் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் உள்ள ஹனியா சிற்றரங்கில் BSNL அதிவேக இன்டர்நெட் சேவை அறிமுக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளும் பொது மக்களிடம் BSNL வழங்கும் புதுப்புது சேவைகளை அறிமுகப்படுத்தவும், அனைத்து சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
BSNL நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினத்தைச் சேர்ந்தோர் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் இந்நிகழ்வு குறித்த தகவலை வழங்கியுள்ளார் .
தகவல் உதவி : அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ், D.A.Sc.,