முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி வளாகத்தில் (பெண்கள் பகுதி), 26-01-2018 வெள்ளிக்கிழமை காலை 09:00 மணியளவில் 69-ம் குடியரசுத் தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஹாஜ்ஜா வாவு M.S. பத்தூல் தலைமை வகித்தார் . முன்னிலை வகித்த ஹாஜ்ஜா M.A.K. ராலியா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இறைமறை மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் , ஹாஜ்ஜா வாவு M.S. பத்தூல் ,மூவண்ணக் கொடியேற்றி வைத்தார் .
பின்னர் , கொடிப்பாடல் மற்றும் உறுதிமொழி பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி F.A. செய்யது ராபியா வரவேற்புரை நிகழ்த்தினார் . மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு பின்னர் , நாட்டுப்பண் மற்றும் ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுப் பெற்றது.
இந்நிகழ்ச்சியை , ஆசிரியை ரக்ஸானா B.A., மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவி நூருல் ஆமினா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
நிலைப்படம் மற்றும் தகவல்: பள்ளி நிர்வாகம்