புன்னகை மன்றம் மற்றும் காயல்பட்டினம் அரிமா சங்கம் இணைந்து உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ,காயல் அரிமா தலைவர் அல்ஹாஜ் S.M. சதக்கத்துல்லாஹ்(ஹாஜி காக்கா ) அவர்களின் தலைமையில் 26/11/2017 ஞாயிற்றுக்கிழமை காலை துளிர் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
புன்னகை மன்றத்தின் பொறுப்பாளர் A.L. நிஜார் அறிமுக உரை நிகழ்த்தினார் .
இந்நிகழ்ச்சியில் , சுவாச பிரச்சனை உள்ள ஒரு பெரியவருக்கு சகோதர் K.M.ரபீக் அவர்களின் அனுசரணையில் வழங்கிய ரூ.2900 மதிப்பிலான (Nebulizer)நெபுலைசர் கருவி அளிக்கப்பட்டது.
துளிர் சிறப்பு குழந்தை பள்ளிக்கு சகோதரர் துணி உமர் அன்சாரி மற்றும் ஓமன் காயல் நல மன்றம் அனுசரணையில் வழங்கிய ரூ.25,000 மதிப்பிலான Speech theraphy பயிற்சி கருவி அளிக்கப்பட்டது.
இயலா நிலை பெரியவருக்கு ஒரு சகோதரரின் அனுசரணையில் வழங்கிய ரூ.4500 மதிப்பிலான ஊன்றுகோல் (crutches)அளிக்கப்பட்டது.
இவை அனைத்தும் புன்னகை மன்ற வாட்சப் குழுமத்தின் முயற்சியில் பெறப்பட்டதாகும்.
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு குவைத்தில் பணிபுரியும் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்களின் அனுசரணையில் வழங்கிய ரூ.65,000 மதிப்பிலான சோலார் மின் விளக்குகள் அளிக்கப்பட்டது.
தேனீர் தொழில் செய்யும் சகோதரிக்கு, வாவு S.ஆப்தீன் அவர்களின் அனுசரணையில் வழங்கிய ரூ.2000 மதிப்பிலான Tea Cane அளிக்கப்பட்டது.
இவை காயல் அரிமா சங்கத்தின் முயற்சியில் பெறப்பட்டதாகும்.
குளிர் காலத்தை முன்னிட்டு தேவையுள்ளவர்களுக்கு பெட்ஷீட் வழங்கும் திட்டமும். துளிர் பள்ளி குழந்தைகளுக்கு Shoe வழங்கும் திட்டமும் இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கம் மற்றும் புன்னகை மன்றம் ஆகியவைகளால் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், குழந்தை நல மருத்துவர் டாக்டர் கிஸார்..ஜனாப் காயல் அமானுல்லா. ஜனாப் மசூது, ஜனாப் பாதுல் அஷ்ஹாப் ஆலீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.நன்றியுரை மற்றும் துஆ கஃபாராவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஜனாப் துளிர் M.L. ஷேக்னா, ஜனாப் A.L. நிஜார், ஜனாப் VDN அன்சாரி, ஜனாப் A .அப்துர்ரஹ்மான், ஜனாப் கவிஞர் சேகு அப்துல் காதர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நிலைப்படம் மற்றும் தகவல் : A.L. நிஜார்