திருச்செந்தூர் இந்து துவக்க பள்ளியில் 12 -11 -2017 அன்று திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. அதில், முஹைதீன் பள்ளி மாணவர்கள் பலர் பங்கு பெற்றனர் .
முதலாம் வகுப்பு பயிலும் மாணவி மைமூன் மலாஹிரா முதல் பரிசும், இரண்டாவது வகுப்பு பயிலும் மாணவிகள் பாத்திமா இப்ரா மற்றும் சுமைய்யா ஆகியோர் இரண்டாவது பரிசு பெற்றனர். பங்குபெற்ற ஏனைய மாணவர்கள் ஆறுதல் பரிசு பெற்றுள்ளனர்.
பரிசு பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.
நிலைப்படம் மற்றும் தகவல்: பள்ளி நிர்வாகம்