நவ. 10இல் கத்தர் கா.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி! காயலர்களுக்கு அழைப்பு!!
கத்தர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், – இம்மாதம் 10ஆம் நாளன்று குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடத்தப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ள உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:-
அன்பின் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கத்தர் வாழ் காயலர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த ஸலாம் “அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)”
வல்ல அல்லாஹ்வின் பேரருளால், நமது கத்தர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர – 31ஆவது பொதுக்குழுக் கூட்டம், இன்ஷாஅல்லாஹ் – வரும் 10.11.2017 வெள்ளிக்கிழமையன்று 11.00 மணி முதல் 16.30 மணி வரை, கத்தர் Messaid (Umm Sayyid) Parkஇல், குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது.
மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜும்ஆ தொழுகையை அங்கே நிறைவேற்றிட அங்கு வந்து சேரும் வகையில் வாகன வசதியும், மதிய உணவு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு பொழுதுபோக்கு சிறப்பு அம்சங்களுடன் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிகளில், மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் அனைவரும் – இச்செய்தியையே அழைப்பாகக் கருதி, உங்கள் குடும்பத்தினருடன் தவறாமல் பங்கேற்க வருமாறும், இச்செய்தியைப் பார்க்க வாய்ப்பில்லாத கத்தர் வாழ் காயலர்களுக்கும் இத்தகவலைப் பகிர்ந்து, அவர்களையும் கலந்துகொள்ளத் தூண்டுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு, கீழ்காணும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்:-
இசட்.எம்.டி.முஹம்மத் அப்துல் காதிர் (தொடர்பு எண்: 3395 3037)
ஹாஃபிழ் ஏ.எச்.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் (தொடர்பு எண்: 5540 2991)
சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹம்மத் இப்ராஹீம் (தொடர்பு எண்: 3353 8691)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: எஸ்.கே.ஸாலிஹ் (பிரதிநிதி – கத்தர் காயல் நல மன்றம்)