இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சமுதாய பேரியக்கத்தின் சார்பில் காயல்பட்டினத்தில் பெரிய சதுக்கை அருகில் , ஹாஜி வாவு K.S. முஹம்மது நாசர் நினைவு மேடையில் , 14-10-2017 சனிக்கிழமை இன்று மாலை 4.30 மணிக்கு துவங்கி இரவு வரை மாநாடு நடைபெற உள்ளது.
சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாவட்ட மாநாடாகவும், முஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு கருத்தரங்கமாகவும் இந்நிகழ்வு அமைய உள்ளது .
நூல் வெளியீடுகள்
இந்நிகழ்வில், அமீரக காயிதே மில்லத் பேரவை வெள்ளி விழா சிறப்பு மலரான காயிதே மில்லத்தாய் வாழும் முனீருல் மில்லத் பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் என்ற நூல் வெளியிடப்பட உள்ளது.
அரசு நலத் திட்ட உதவிகள் – வழி முறைகள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி ஆகிய நூற்களும் வெளியிடப்படுகின்றன.
ஊழியர்களை கவுரவித்தல்
முஸ்லீம் லீக் இயக்கத்தில் பல்லாண்டு காலமாக தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர் திலகங்கள் மற்றும் தியாக செம்மல்கள் இம்மாநாட்டில் சிறப்பிக்க படுகிறார்கள்.
மாநாட்டில் பங்கேற்போர்
இந்திய யூனிய முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் , தேசிய பொது செயலாளர் கேரளா முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் P.K. பிஞ்சாலி குட்டி , முஸ்லீம் லீக் தமிழ் மாநில பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் K.M. முஹம்மது அபூபக்கர் ,
மாநில கொள்கை பரப்பு செயலாளர் காயல் மஹபூப் , மாநில அமைப்பு செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், மாநில துணைச் செயலாளர் S.A. இபுறாஹிம் மக்கி , முஸ்லீம் யூத் லீக் கேரளா மாநில செயலர் ஹாஜி செய்யது முனவ்வர் அலி சிஹாபு தங்கள் , தூத்துக்குடி மாவட்ட செயலாளர் S.J. மஹ்மூதுல் ஹசன் , மாவட்ட தலைவர் P. மீராசா மரைக்காயர் உள்ளிட்ட முஸ்லீம் லீக் முன்னோடிகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
மேலும் , திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா R ராதாகிருஷ்ணன் , பெ கீதா ஜீவன், காங்கிரஸ் மூத்த தலைவர் S. பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தோழமை கட்சி முன்னோடிகளும் இம்மாநாட்டில் உரையாற்றுகின்றனர்.
முஸ்லீம் லீக்கின் நகர செயலாளர் A.L. அபு ஸாலிஹ் உள்ளிட்ட நகர முஸ்லீம் லீக் ஊழியர்கள் மாநாடு சிறக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
நேரலை :
இம்மாநாட்டு நிகழ்வு அனைத்தும் www.muslimleaguetn.com என்ற இணையத்தில் நேரலை செய்யப்படும் .
முஸ்லீம் லீக் மாநாடு சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகளை உரித்தாக்குகின்றோம்.
தகவல்: பிரசுரம்