கத்தர் கா.ந.மன்றம் சார்பில் அக். 07இல் – நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்கள் கலந்துகொள்கின்றன!!
கத்தர் காயல் நல மன்றம் சார்பில் – இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து – இம்மாதம் 07ஆம் நாளன்று – நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி, காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
இதில், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளி, எல்.கே.மேனிலைப் பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி, அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி ஆகிய 7 பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்த விபரங்களடங்கிய பிரசுரம், விண்ணப்பப் படிவங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. விபரப் பிரசுரம் வருமாறு:-
இத்தகவலை, கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் வெளியிட்டுள்ளார்.
நிலைப்படும் மற்றும் தகவல் : எஸ்.கே.ஸாலிஹ் (பிரதிநிதி, கத்தர் காயல் நல மன்றம்)