இக்லாஸ் டிரஸ்ட் – IAS அகாடமி நெல்லை மாவட்ட முஸ்லிம் மருத்துவர்கள் நல கூட்டமைப்பு இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 10.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் L.K. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நமது சமுதாய மாணவ, மாணவியர்களுக்கு UPSC (IAS/IPS/IFS/IRS) மற்றும் TNPSC தேர்வுக்கான பயிற்சியைப் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக இறைமறை வசனங்களை ஓதி, ஹாஃபிழ் அப்துல்லாஹ் துவக்கி வைத்தார்.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் வாவு M.M.முஹ்தஜிம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
டாக்டர் மாலிக் அவர்கள் மற்றும் டாக்டர் முஹம்மது இபுறாகீம் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்கள்.
L.K.மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்யது அகமது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் இத்ரீஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
டாக்டர் முஹம்மது இபுறாகிம் அவர்கள் இந்நிகழ்ச்சியைப் பற்றிய தொகுப்பினை திரையில் விளக்கினார், அனஸ் பீரப்பா அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இக்ரா கல்விச்சங்க பொருளாளர் K.M.T. சுலைமான் அவர்கள் இநநிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
மாணவர்களோடு கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்களும், பெற்றோர்களும் இந்நிகழ்சியில் பங்கேற்றனர்
நிலைப்படம் மற்றும் தகவல் : கே.எம்.டி.சுலைமான், பொருளாளர், இக்ரா கல்விச் சங்கம்.