காயல்பட்டினத்தில் கடந்த 34 ஆண்டு காலமாக மிகச் சிறப்புடன் இயங்கி வரும் இயக்கம் றஹ்மதுன் லில் ஆலமீன் மீலாது பேரியம் ஆகும். ஆண்டு தோறும் பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் பெருவிழாவை மிகச் சிறப்புடன் நடத்தி, நாடறிந்தோர்களை அழைத்து உரையாற்றச் செய்வதும், இந்நிகழ்வில் பல்வேறு வரவேற்கத்தக்கவைகளை இடம்பெறச் செய்வதும் இப்பேரியத்தின் நடைமுறையாகும் .
மேலும், இம்மீலாது பேரியத்தினர் சமூக நல சேவைகளை, மக்கள் நலத்திற்கான உதவிகளை புரிவோராகவும் விளங்கி வருகின்றனர்.
இந்த அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் 3-09-2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
ஜனாப் M.M. முஹம்மது முஹையதீன் தலைமையேற்ற இக்கூட்டத்தை ஆசிரியர் Z.A. சேக் அப்துல் காதிர் இறைமறை ஓதி துவக்கி வைத்தார்
இக்கூட்டத்தில் , சென்ற ஆண்டு நடைபெற்ற பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் பெருவிழாவை சார்ந்த வரவு செலவு அறிக்கையை ஜனாப் T.M.L. செய்யது உமர் சமர்ப்பித்தார் .
நிறைவாக , எதிர்வரும் 2018 ஜனவரி திங்கள் 6 மற்றும் 7 (சனி மற்றும் ஞாயிறு ) ஆகிய இரு நாட்களில் மீலாது நபி பெருவிழாவை சிறப்பாக நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது .
அல்ஹாபிழ் M.A.K. ருக்னுத்தீன் சாஹிப் அவர்களின் துஆவுடன் இப்பொதுக் குழுக் கூட்டம் நிறைவுப் பெற்றது.
நிலைப்படம் மற்றும் தகவல் : சட்னி செய்யது மீரான் , ஜித்தா