எல்லா உலகும் ஏகமாய்க் காக்கும் வல்லான் இறையே வான்புகழ் அல்லாஹ் !
புனித இறைவனின் புதுமை நூலினால் மனித மணிகளை மாண்புறக் கோத்த நபியே ! உங்கள் மீதும் உங்கள் அடிச்சுவட்டில் தடம் பதித்தோர் அனைவர் மீதும் வல்லான் அருள் வான்மழையாய் பொழிக!
உலகெங்கும் வாழ்கின்ற மாந்தர் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல் வாழ்த்துகள். தன்னலம் , தன்முனைப்புணர்வு இவைகளைத் தியாகம் செய்து பொதுநலம் பேண இப்பெருநாளில் உறுதி ஏற்போம்.
அனைவர் வாழ்விலும், அகிலம் முழுமையும் அமைதி நிலவ அருளாளனை இறைஞ்சுவோம்.
ஈத் முபாரக்