காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் வணிக செயலாட்சியல் துறையின் சார்பாக ஒரு நாள் திறன் பயிற்சி முகாமில் வாணிப தகவல் தொடர்பு மேலாண்மை (Skill Training for Youth on Business Communication Management) என்ற தலைப்பில் 03.08.2017 வியாழன் அன்று 10.00 மணியளவில்,
கல்லூரியின் நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையில் துணைத்தலைவர் ஹாஜி வாவு S.A.R. சாகுல் ஹமீது B.E MS (USA) மற்றும் துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இறைமறை மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
வணிக செயலாட்சியல் துறைத்தலைவர் பேராசிரியர் திருமதி செ.அ. ரஹ்மத் ஆமினா பேகம் MBA., M.Phil., MBA(HR) வரவேற்புரை வழங்கி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். முதல்வர் முனைவர் ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. அவர்கள் தொடக்க உரை வழங்கினார்.
ஹாஜி வாவு S.A.R. சாகுல் ஹமீது ஷாஜஹான் B.E MS(USA) அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசினை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் Dr. S. மனோவ ராஜா M.A., M.Ed., MHRM., DD (University of Jeruselam)அவர்கள் வாணிப தகவல் தொடர்பு மேலாண்மை குறித்து மாணவிகளுக்கு பயிற்சிகளை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சி காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 11 கல்லூரிகளிலிருந்து 101 மாணவிகளும் 6 பேராசியர்களும் கலந்து கொண்டனர். துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் அவர்கள் நிறைவுரை வழங்கினர்.
அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் பங்கு பெற்ற அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் பேராசிரியருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.
வணிக செயலாற்றியல் துறை பேராசிரியர் செல்வி த. சாந்தாதேவி MBA அவர்கள் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி துஆ ஓத, தேசிய கீதத்துடன் இனிதே நிறைவுற்றது.
ஒரு நாள் திறன் பயிற்சி முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் வணிக செயலாட்சியல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகளும் செவ்வனே செய்திருந்தனர்.
நிலைப்படம் மற்றும் தகவல்: கல்லூரி நிர்வாகம்