வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கால்பந்து 2017 : சீனியர் பிரிவு போட்டிக்கான அட்டவணை வெளியீடு!
ஹாங்காங் மற்றும் காயல்பட்டணத்தில் செயல்பட்டுவரும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக, காயல்பட்டணத்தின் இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதற்காகவும், வீரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த 8 ஆண்டுகளாக கால்பந்து போட்டிகளையும், 7 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளையும் வல்ல இறைவனின் துணையுடனும், நமதூர் விளையாட்டு மைதானங்களின் ஆதரவுடனும், வீரர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தி வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 9ஆம் ஆண்டு கால்பந்து போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ” மே மாதம் 2ஆம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்கான வீரர்கள் சேர்க்கை வருகின்ற 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்போட்டிக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் மே 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
———————————————————————————————————————————————————————————-
வீ-யூனைடெட் ஜூனியர்ஸ் லீக் 2017 : “FAAMS” கோப்பைக்கான கால்பந்து போட்டி அட்டவணை வெளியீடு!
ஹாங்காங் மற்றும் காயல்பட்டணத்தில் செயல்பட்டுவரும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக, காயல்பட்டணத்தின் இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதற்காகவும், வீரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த 8 ஆண்டுகளாக கால்பந்து போட்டிகளையும், 7 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளையும், கடந்த ஆண்டு ஜூனியர்ஸ் லீக் கால்பந்து போட்டியையும் வல்ல இறைவனின் துணையுடனும், நமதூர் விளையாட்டு மைதானங்களின் ஆதரவுடனும், வீரர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தி வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.
வீ-யூனைடெட் ஜூனியர்ஸ் லீக் கால்பந்து போட்டி 2ஆம் ஆண்டு கால்பந்து போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 22ஆம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது…
தகவல்:M. ஜஹாங்கிர்