காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 27.02.17 திங்கட்கிழமை மதியம் 3 மணியளவில் கல்லூரி முதல்வர் முனைவர் J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி. மெர்சி ஹென்றி M.A., Ph.D. அவர்கள் முன்னிலையில் பெண்கள் கழகத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல் துறை மாணவி S.D. பல்கீஸ் புஸ்ரா கிராத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும், பெண்கள் மையத்தின் ஒருங்கினைப்பாளருமான திருமதி சு. ஏஞ்சல் லதா M.A., M.Phil., வரவேற்புரை வழங்கியதோடு சிறப்பு விருந்தினரைக் குறித்து அறிமுகவுரையும் வழங்கினார்.
பாளையங்கோட்டை ஆக்னஸ் ஜோசப் மருத்துவமனையின் தலைமை மருத்துவர், டாக்டர் திருமதி ஆக்னஸ் MBBS., MD.DGO., MNAMS சிறப்பு விருந்தனராக வருகை தந்து, பெண்களும் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் ர. தங்கராணி M.Com., M.Phil., SET நன்றியுரை வழங்கினார்.
மூன்றாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி K.A.C. பீவி பாத்திமா துஆ ஓத, நாட்டுப்பண்ணுடன் பெண்கள் கழகத்தின் சிறப்புக் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. கூட்டத்தில் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், உதவிப் பேராசிரியைகள், மாணவியர் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிலைப்படம் மற்றும் தகவல்: கல்லூரி நிர்வாகம்