காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த ஜனாப் S.T. செய்யது முஹம்மது அலி அவர்கள் , 23 -01 -2017 திங்கட்கிழமை நேற்று இரவு 8 . 30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் மர்ஹூம் M.K.S. முஹையதீன் இபுறாஹிம் சாஹிபு என்ற BA காக்கா அவர்களின் தம்பி மகனும், மர்ஹூம் M.K.S. முஹம்மது சதக்கத்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் ஊண்டி ஷைகு முஹம்மது ஸாலிஹ் அவர்களின் மருமகனும்,
ஹாஜி S.T . சேக்னா லெப்பை , ஹாஜி S.T . பாதுல் அஸ்ஹாப், மர்ஹூம் ஹாஜி S.T . மஹ்மூது லெப்பை ஆகியோரின் சகோதரரும், ஹாஜி S.M.A. முஹையதீன் சதக்கத்துல்லாஹ், ஹாஜி S.M.A. ஷைகு முஹம்மது ஸாலிஹ் ஆகியோரின் தகப்பனாரும், ஜனாப் P.M.T. அப்துர் ரஹ்மான், ஹாஜி விளக்கு V.S.M. ஷாஹுல் ஹமீது ஆகியோரின் மாமனாரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ், இன்று அஸர் தொழுகைக்குப் பின் ஜூம்ஆ பெரியப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
மர்ஹூம் அவர்கள் குறித்த மேலதிகத் தகவல் பின்னர் இச்செய்தியில் இணைக்கப்படும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக ஆமீன் .