காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை மற்றும் நகர்நல மன்றத்தின் நிர்வாகிகள் IOB மண்டல அதிகாரியை சந்தித்து பணிகளை விரைவாக்க கோரிக்கை!

30.11.2016 காலையில் IOB காயல்பட்டினம் கிளை மேளாலரை சந்தித்து அதன் மூலம் தூத்துக்குடி மண்டல மேளாலரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி பெறப்பட்டதின் அதனடிப்படையில் மதியம் 1:30 மணிக்கு மண்டல மேளாலரை சந்திக்க காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை மற்றும் நகர்நல மன்றத்தின் அங்கத்தினர்கள் அடங்கிய குழு தூத்துக்குடி புறப்பட்டது.
IOB வங்கியின் தூத்துக்குடி மண்ட மேளாலர் திருமதி. உமா மகேஷ்வரி அவர்களை சந்தித்த இக்குழுவினர், காயல்பட்டினத்தில் IOB வங்கியில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.
அதிகமாக கணக்குகளை கொண்ட வங்கியில், மக்கள் சேவை துரிதமாக இல்லை என்றும், தற்போதுள்ள சூழ்நிலையில் ஒருநாளைக்கு குறைந்தபட்டசம் ரூ.30 லட்சம் காயல்பட்டினம் கிளைக்கு தேவை என்றும், வங்கியில் பணத்தை போடுவதற்கும், எடுப்பதற்கும் ஒரே வரிசையில் நிறுத்துவதும், பெண்களை முன்பகுதியில் வரிசையில் நிறுத்துவதும் மிகவும் சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும்,
IOB வங்கியின் ATM மாதத்திற்கு அதிகபட்சமாக 7 தினங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாகவும், வங்கி ஊழியர்கள் பற்றாக்குறை, கணக்கு விபரம் அச்சிடக்கூடிய மிஷின் குறைபாடு போன்றவற்றை விரிவாகவும், விளக்கமாகவும் தெரிவித்தனர்.

இவைகளை கேட்டறிந்த மண்டல மேளாலர் அவர்கள்… தற்போதைக்கு காயல்பட்டினம் IOB கிளையில் வழங்கப்பட்டுள்ள 200 டோக்கன்களுக்கான பணத்தை நாளை வழங்குவதாகவும், படிப்படியாக டிசம்பர் முதல் வாரத்திற்குள் தேவையான அளவிற்கு பணத்தை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாகவும்,
வங்கியில் பணத்தை போடுவதற்கும், எடுப்பதற்குமான வரிசைகளை தனித்தனியே முறைபடுத்துவதற்கும், பெண்களுக்கான வரிசையை வழமைபோல் பின்புறம் கொண்டு செல்வதற்கும் இன்னும் இரண்டு நாட்களில் கூடுதலாக பணியாட்களை ஏற்பாடு செய்த பின்னர் நடவடிக்கை எடுப்பதாகவும், காயல்பட்டினத்தில் கூடுதலாக 2 இடங்களில் புதிய ATM இயந்திரங்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளது என்றும்,
தற்போதுள்ள பழைய இயந்திரத்தை மாற்றிவிட்டு புதிய ATM மிஷின் விரைவில் பொருத்தப்படும் என்றும், கணக்கு விபரம் அச்சிடக்கூடிய மிஷின் குறைபாடு விரைவில் சரிசெய்யப்படும் என்றும், வங்கியில் கூடுதலாக இரண்டு நபர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தவர்,
வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் என்னுடைய கவனத்திற்கு நீங்கள் கொண்டுவந்தால், உடனடியாக அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன் என மண்டல மேளாலர் திருமதி. உமா மகேஷ்வரி உத்திரவாதம் அளித்தார்.
இச்சந்திப்பின் போது காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவையின் தலைவர் ஹாஜி S.O. அபுல்ஹஸன் கலாமி, செயலாளர் ஹாஜி வாவு M.M.சம்சுத்தீன், துணைச் செயலாளர்கள் ஹாஜி A.A.C. நவாஸ், ஹாஜி S.A. ஜவாஹிர், ஹாஜி L.M.E. கைலானி, பொருளாளர் ஹாஜி A.K.கலீல்,
ஒருங்கிணைப்பாளர் ஹாஜி S.A.R. அஹமது இஸ்ஹாக், நகர்நல மன்றத்தின் அட்மின்கள் சகோ. சொளுக்கு A.J. முஹ்யத்தீன், சகோ. M.A.K. ஜெய்னுல் ஆப்தீன், அங்கத்தினர்கள் ஜனாப். V.I. ஜெய்னுல் ஆப்தீன் மற்றும் திரு. E.M. சாமி ஆகியோர் பங்கேற்றனர்.
நிலைப்படம் மற்றும் தகவல் : சொளுக்கு A.J. முஹ்யத்தீன் அப்துல் காதிர்
December 1st, 2016