Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
11:31 am
Tuesday, 11 August 2020
Top

இறைச் சட்டத்தின்படி சவுதியில் இளவரசருக்கு மரண தண்டனை



அல்லாஹ்வுடைய சட்டத்தில் சமரசம் இல்லை : இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது சவூதி அரேபியா…..!!

 

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியா அல்லாஹ்வுடைய சட்டத்தில் எவ்வித சமரசமும் இல்லையென்று திட்டவட்டமாக அறிவித்து நாட்டின் இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

 

மன்னரின் ராஜ குடும்பத்தை சேர்ந்த இளைஞர் கபீர் இளவரசர் அந்தஸ்து கொண்டவர். கபீருக்கும் அவருடைய நண்பருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் நண்பரை கொலை செய்து விட்டார்.

 

 இளவரசர் கபீர் 

இளவரசர் கபீரை சவூதி அரேபிய காவல்துறை கைது செய்தது.

 

காவல்துறையின் விசாரணையில் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களாலோ, ஆட்சி அதிகார வர்க்கங்களினாலோ எவ்வித தலையீடுகளும், அத்துமீறல்களும் இல்லாமல் விசாரணை முறையான பாதையில் சென்று கொலை குற்றத்திற்கான ஆதாரங்களை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்தது. நீதிமன்ற விசாரணையில் கொலை செய்தது உறுதியானது.

 

கொலை குற்றத்திற்கு அல்லாஹ்வுடைய சட்டமான குர்ஆனும், நபிவழியும் மரண தண்டனையை கூறியுள்ளதால் இளவரசர் கபீருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

 

மன்னர் குடும்பத்தை சேர்ந்த இளவரசருக்கு மரண தண்டனை என்ற பரபரப்பான சூழலில் இறுதியாக மன்னர் சல்மான் அவர்களிடம் கொலை குற்றவாளியை மன்னிக்குமாறு குடும்பத்தின் சார்பில் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.

 

மன்னர் சல்மான் 

மனுவை பார்த்த மன்னர் சல்மான்…நான் இந்த நாட்டிற்கு மன்னராக இருப்பதற்காகவோ, கொலையாளி என்னுடைய பேரன் என்பதற்காகவோ கொலை குற்றவாளியை மன்னிக்க முடியாது.

 

கொலைக்கு கொலை என்ற அல்லாஹ்வுடைய சட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்து மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து இளவரசருக்கு மரண தண்டனையை உறுதி செய்தார். அதனைத்தொடர்ந்து நேற்று (18.10.16) இளவரசர் கபீருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 

சவூதி அரேபியாவின் மன்னராக ஆட்சிப்பொறுப்பேற்ற மன்னர் சல்மான் அவர்கள் தனது முதல் நாள் உரையில்….

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னுடைய மகள் திருடினாலும் கையை வெட்டுவேன் என்றார்கள். எனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் என் குடும்பத்தினரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும் சட்டப்படி தண்டனை வழங்கப்படும், என்னுடைய மகன்கள், பேரன்கள் தவறு செய்தாலும் எவ்வித சமரசமும் இருக்காது என்றார்.

 

அவர் சொன்னதுபோல் தன்னுடைய பேரனான இளவரசருக்கு மரண தண்டனை வழங்கி இறை சட்டத்தில் எவ்வித சமரமும் இல்லை என்று நிரூபித்து விட்டார்.

 

மேலும் சவூதி அரேபிய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு 158 பேருக்கு மரண தண்டனை வழங்கியது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரே நாளில் 47 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்கியது.

 

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதிலும் சவூதி அரேபிய அரசு தனித்து முத்திரை பதித்து வருகிறது.

 

அரசனானாலும், ஆண்டியானாலும் அல்லாஹ்வுடைய சட்டத்தில் எவ்வித சமரசமும் இல்லை என்பதை சவூதி அரேபியா உலகத்திற்கு பிரகடனம் செய்துள்ளது.

 

தகவல்: வாட்சப் மூலம் M.L. அப்துல் ரசீது 

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


1 Comment to “இறைச் சட்டத்தின்படி சவுதியில் இளவரசருக்கு மரண தண்டனை”

  1. L.A.K.BUHARY  , Hong Kong    IP : 202 .  .  . 
    says:

    COMMON CIVIL CODE என்னும் பொது சிவில் சட்டம் எந்த காலத்துக்கும் யாருக்கும் பொருந்தாத , அதுவும் இந்தியா போனற பன்முகத்தன்மை கொண்ட மக்களுக்கு அறவே பொருந்தாத சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த சட்டமும், அதை முறையாக தீர விசாரித்த வரைமுறைகளும் , அதை தேவையற்ற காலதாமதமின்றி நிறைவேற்றிய விதமும், இன்றைய நம் நாட்டின் ஆட்சியாளர்களும் ,நீதிஅரசர்களும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டிய ஓர் சிறப்பம்சமாகும்.

    இது தான் சட்டம், இது தான் நீதி, மக்களுக்காக , மக்களின் நலனுக்காக தான் சட்டம் இருக்க வேண்டும் அதை அமுல்படுத்தவேண்டும் என்ற முன்மாதிரி இஸ்லாம் வகுத்து தந்திருக்கிறது..அதை இன்று பொறுப்பிலிருக்கும் அந்நாட்டின் மன்னர் எந்த பாரபட்சமின்றி நீதியை நிலைநாட்டி தன் கடமையைச் செய்திருக்கிறார்.

    குற்றத்திற்கான தண்டனை நிறைவேற்றம் அக்குற்றச்செயல் மீண்டும் அரங்கேறக்கூடாது என்னும் வகையில் அணுகப்படும் போது தான் அது குற்றங்கள் இல்லாமல் போகவோ அல்லது குறையவோ வாய்ப்பு இருக்கும்.வழக்குகளும் குறையும், தேக்கமின்றி விரைந்து தீர்வு காணப்பட்டு நீதியை நிலைநிறுத்தும்.

    ஒருவேளை அப்படி நம் நாட்டில் குற்றங்கள் நடைபெற கூடாது அல்லது குறையவேண்டும் என்னும் நினைக்கும் ஆட்சியாளர்கள் இது போனற சட்டங்களையே COMMON CIVIL CODE ஆக நம் நாட்டில் அமுல்படுத்தினால் தான் குற்றங்கள் குறையும், நாடும் வளம் பெரும், மக்களும் நலன் பெறுவர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2019 © kayalconnection.com