Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
09:11 pm
Sunday, 19 May 2019
Top

அக் 17 மற்றும் 19 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்



தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

 

இத்தகவலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் அறிவித்தார்.

 

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

 

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான நேரடித் தேர்தல்கள் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

 

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 91,098 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

இதற்கான வேட்புமனுக்கள் நாளை (26.09.2016) முதல் பெறப்படும். நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும்.

 

வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 3-ம் தேதி. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அக்டோபர் 4-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 6-ம் தேதியே கடைசி.

 

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ல் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. உள்ளாட்சித் தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

நேரடி தேர்தல் அனைத்தையும் அக்டோபர் 26-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 5.8 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

 

தேர்தல் பணிகளை பார்வையிட 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.  நேரடித் தேர்தலுக்குப் பின்னர் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் என 13,362 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 2-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெறுகிறது.

 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

தகவல்: இந்து தமிழ் நாளிதழ் 

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


3 Comments to “அக் 17 மற்றும் 19 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்”

  1. jesmudeen  , United Arab Emirates    IP : 92 .  .  . 
    says:

    assalamu alaikkum…..
    ulal…lancham…illatha thalaivargalai thernthu edutthu samuthaya sevaihalai seihintra nallullangalai kandarinthu oottu pottu vetri pera seiyya vendum….appothu thaan nattukkum namakkum nanmai alikkum…namathu ottu uoorimaiyai thavaramal pathiu seiyya vendum… anbudan….koman jesmudeen…

  2. Mohamed  , Saudi Arabia    IP : 37 .  .  . 
    says:

    அஸ்ஸலாமுஅலைக்கும்

    ஊழலை எதிர்த்து களம் காணும் வாட்ஸாப்ப் குழுவிற்கு வாழ்த்துக்கள் .

    இரண்டு விஷயம் அவர்கள் உறுதி செய்யணும் .

    1. அதன் நிர்வாகிகள் ஆதரவாளர்கள் , இதுவரை எந்த எந்த ஊழலும் செய்யவில்லை என்று உறுதி செய்ய வேண்டும் ? (அல்லது எதாவது செய்து இருந்தால் தெரியாமல் செய்து விட்டேன் இனி செய்யமாட்டேன் என்று வெளிப்படையாக சொல்லினால் நல்லது ),

    2. இனி அவர்கள் ஊழல் செய்தால் (துணை போனால் ) அவர்களை பொதுமக்கள் என்ன செய்யலாம் ?

    இதுவரை அரசியல் கட்சிகள் ஒதுங்கி இருந்தது , இனி போட்டி போட போகிறது , அரசியல் கட்சி போட்டி போட்டால் (குறிப்பாக திராவிட கட்சிகள் ) ஊழல் நிச்சயம் வரும் , இதற்க்கு இந்த நிலைமைக்கு யார் காரணம் ? இதை செய்துவிட்டு எவ்வாறு ஊழலை ஒழிக்க முயற்சிப்பது தான் புரியவில்லை …

  3. mackie noohuthambi  , Cambodia    IP : 163 .  .  . 
    says:

    சுயபரிசோதனை சத்திய சோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது.

    நாம் நகர்மன்ற தலைவரை தேர்ந்தெடுத்தோம் நகர் மன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தோம். யாருமே நமது உரிமைகளில் தலையிடவில்லை, நம்மை யாரும் வற்புறுத்தவில்லை, நமக்கு யாரும் பணம் இலவசங்கள் தந்து நம்மை ஏமாற்ற வில்லை. மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள், தலைவர் என்பது தான் நிதர்சன உண்மை. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் நமதூர் அடைந்த முன்னேற்றங்கள் பின்னடைவுகள் என்ன என்று எண்ணிப் பார்த்து நாமே நம்மை சத்யசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது. மீண்டும் நமது வாக்குகளை அளித்து இன்னும் 5 ஆண்டுகளுக்கு நம் நகர் மன்ற உறுப்பினர்களை மட்டும் தேர்ந்தெடுக்க இருக்கிறோம். நகர்மன்ற தலைவரை மக்களே தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடமிருந்து பறிக்கப் பட்டுள்ளது இது ஒரு மறைமுகமான ஜனநாய படுகொலை

    இதற்கு யார் காரணாம். நாமேதான். நமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டு தலைவர் கொண்டு வரும் தீர்மானங்களை உறுப்பினர்கள் உதாசீனம் செய்வதும் உறுப்பினர்கள் கொண்டு வரும் தீர்மானங்களை தலைவர் உதாசீனம் செய்வதுமாக – அரசியல் சதுரங்க ஆட்டம் ஆடி ராணிக்கு செக் வைக்க துடித்தவர்கள் ராஜாவை தோற்கடிக்க நினைத்தவர்கள் என்று இரு சாரார் நம்மிடையே இருந்து நாம் கொடுத்த பொறுப்புக்களிலிருந்து விலகி, ஈகோ என்ற மாயைக்குள் தள்ளப் பட்டு பொது மக்களை படாத பாடு படுத்திவிட்டார்கள். அவரவர்களுக்கு மனதில் பட்டவாறு அதற்கு நியாயமும் கற்பித்துக் கொண்டார்கள். அவர்கள் மீண்டும் களத்தில் குதித்தாலும் அவர்களும் தங்களை சத்திய சோதனைக்கு ஆள்படுத்திக் கொள்ள வேண்டும்.

    லஞ்சம் கொடுக்க மாட்டேன் லஞ்சம் வாங்கமாட்டேன் அத்தகைய பேர்வழிகளுக்கு நான் வாக்களிக்க மாட்டேன் என்று இறைவன் பெயரால் சத்தியமிட்டு உறுதிகூறுகிறேன் என்ற வாசகங்கள் அடங்கிய பகிர்வுகள் நம்மிடையே இப்போது நடை பெற்று வருகிறது.

    ”எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் தீயவனாவதும் நல்லவனாவதும் அன்னை வளர்ப்பத்திலே” என்று ஒரு கவிஞன் பாடுவான். நபிகள் நாயகம் அவர்கள் நமக்கு சொல்லும்போது ”எல்லா பிள்ளைகளும் முஸ்லிம்களாகவே பிறக்கின்றன அவர்களை நஸாறாக்களாக யஹூதிகளாக ஆக்குவது அவர்களது பெற்றோர்களே” என்று சொல்வார்கள். இந்த இரண்டு செய்தியும் நமக்கு சொல்லும் அறிவுரை….நம்மால் தான் இவர்கள் ஊழல் லஞ்சம் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த இழி செயல்களின் ஊற்றுக் கண்ணே நாம்தான் என்று சொல்கிறது.

    ஆனால் நமது நாட்டில் ஆங்கிலேயர் காலம் முதலே இந்த லஞ்சம் ஊழல் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி கிடந்தது மகாத்மா காந்தி அவர்கள் சொல்வார்கள்…

    FROM KASHMIR TO KATHIYAVAAR CORRUPTION IS PREVAILING …..இந்த நிலையை மாற்றுவதற்கு பலர் அவதாரம் எடுத்தார்கள். சமீபத்தில் ஊழலுக்கு எதிராக ராம் லீலா மைதானத்தையே அதிர வைத்த அண்ணா ஹசாரே, கெஜ்ரிவால் போன்றவர்கள் முயன்று தோற்று விட்டார்கள். இருந்தாலும் அதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இப்போதும் கூட நமது ஊரில் களத்தில் இறங்கும் நபர்களை நாம் அடையாள கண்டு நல்லவர்கள் என்று நாம் நினைப்பவர்களை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் உள்ளே சென்ற பிறகு அவர்கள் செய்யும் ஊழல்களை நம்மால் தடுத்து நிறுத்து முடியாது. அதற்கு ஒரே வழி நாம் தேர்ந்தெடுத்து அனுப்பியவர்கள் தவறு செய்வது நிரூபணமானால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்வதற்கு ஒரு சட்டம் வேண்டும் அப்படி ஒரு சட்டம் இல்லை என்றால், அவர்களை அந்த மன்றத்தில் இருக்கவிடாமல் செய்வதற்கு நாம் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்பதைவிட அவர்களை ஜமா அத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும் இதெல்லாம் நமதூரை பொறுத்தவரை சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சன உண்மை . எனவே நாம் இறுதியாக அல்லாஹ்விடமே கை ஏந்துவோம். நாம் தேர்ந்தேடுப்பவர்களின் கரங்களை கறைபடாதவைகளாக லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் துணைபோகாதவர்களாக அல்லாஹ் ஆக்கி வைப்பானாக.

    ஆனால் நம்மவர்கள் எவ்வளவு கை சுத்தமாக இருந்தாலும் நமதூருக்கு வரும் நல்ல திட்டங்களுக்கு அரசு அங்கீகாரம் தேவை. அதை செயல்படுத்த மேலிடத்திலிருந்து லஞ்சம் எதிர்பார்க்கிறார்கள் அப்படி கொடுத்தால்தான் நமதூருக்கு அந்த நலத்திட்டம் வரும் என்றால் நாம் என்ன செய்ய முடியும் என்று கோமான் தெரு முன்னாள் உறுப்பினர் லுக்மான் அவர்கள்கே ட்கும் கேள்விக்கு விடை இல்லை IT IS A BILLION DOLLAR QUESTION இந்த கேள்விக்கு உரிய விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

    நமதூருக்கு கடந்த 5 வருடங்களில் எந்த நல திட்டமும் செயல்படுத்த முடியாமல்போனது இதனால்தானா…அப்படியானால் நான் மட்டும் MR CLEAN என்று தமிழ்நாடு தலைமை செயலகத்தில் போய் நிற்பதில் என்ன பயன். நாளிதழ்களில் அன்றாடம் வரும் செய்திகள் அமைச்சர்கள் அளவில் எத்தனை கோடிகள் கொடி கட்டி பறக்கின்றன என்பதை சொல்கின்றன. நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் இவை கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் சட்டத்தில் இவர்களை தண்டிக்க எந்த கடுமையான சட்டமும் இல்லை. என்ன செய்வது.

    மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம்
    கங்கை சூதகமானால் எங்கே நீராடுவது.

    கங்கையை புனிதமாக நினைப்பவர்கள் இந்த கேள்வியை கேட்கிறார்கள்….

    பிறக்கிற பிள்ளை சுகப் பிரசவமாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப் படுகிறோம். ஆனால் பிறக்கும்போது ஆப்பரேஷனோடு பிறக்கிறது. ஆர்ட்டிஸன் வியாதியோடு வளர்கிறது புற்று நோயோடு போராடுகிறது. யாருக்கும் பிரயோஜனமில்லாமல் மரிக்கிறது.

    நல்லவர்களை தேர்ந்தெடுப்போம். அவர்கள் தொடர்ந்து நல்லவர்களாக இருப்பதற்கு செயல்படுவதற்கு அல்லாஹ்விடம் கை ஏந்தி பிரார்த்திப்போம்.

    LAA THOWFEEQA ILLAA BILLAAH .

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2019 © kayalconnection.com