சிங்கப்பூரில் காயல் நல மன்றத்தினர் இவ்வாண்டு ஹஜ்ஜுப் பெருநாள் அன்று 99-ப்ரிஸ்டோ ரெஸ்ட்டாரெண்ட் பாயாலேபறில் சங்கமித்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 100 பேர் கலந்துக் கொண்டனர் அன்று மாலை 5:30 மணிக்கு வருகை தந்த தேநீர், பக்கோடா வழங்கப்பட்டது.
சாளை நெய்னா முஹம்மது மற்றும் துபாயிலிருந்து மீராசாஹிப் ஆகியோர் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் பங்கேற்றனர். ஹாஜி பாளையம் ஹஸன் அவர்களின் இல்லத்தில் மஃரிப் ஜமாஅத் நடைபெற்றது .
இரவு அனைவருக்கும் சுவையான சிக்கன் பிரியாணி, தயிர் சம்பல், கேரட் ஹல்வா வழங்கப்பட்டது. பின்னர் வெற்று கவர் வழங்கப்பட்டு அதில் இஃக்ரா கல்வி ஊக்கத்தொகைக்காக உறுப்பினர்களிடமிருந்து நிதி வசூல் செய்யப்பட்டது.
இரவு ஒன்பது மணி அளவில் அனைவரும் விடைபெற்றுச் சென்றனர்.
நிலைப்படம் மற்றும் தகவல் : ஹிஜாஸ் மைந்தன்