Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
12:07 am
Friday, 19 April 2024

சிறப்புடன் நடந்தேறிய பெங்களூரு காயல் மன்றப் பொதுக்குழு



மழலையர், பெரியோருக்கான விளையாட்டுப் போட்டிகள், களறி விருந்துடன் நடந்தேறியது பெங்களூரு கா.ந.மன்றப் பொதுக்குழு! காயலர்கள் திரளாகப் பங்கேற்பு!!

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சிகள், மழலையர் – பெரியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் & களறி விருந்துடன் நடைபெற்றுள்ளது. காயலர்கள் இதில் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-

 

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்…

 

எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & காயலர் குடும்ப சங்கம 3ஆவது நிகழ்ச்சிகள், பெங்களூரு தேவனஹல்லியிலுள்ள ஆடிட்டர் புகாரீ ஃபார்ம் ஹவுஸ் தோட்டத்தில், 28.08.2016. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.

 

முன்னேற்பாடுகள்:

 

 

பல நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு, சுமார் ஒரு மாத கால ஏற்பாட்டுப் பணிகளையடுத்து இப்பொதுக்குழுக் கூட்டமும், குடும்ப சங்கம நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளன.

 

நிகழ்வு நாளுக்கு முந்திய நாளான சனிக்கிழமையன்று, மன்ற நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் குழு, பெங்களூரு நகரிலிருந்து சுமார் 1 மணி நேர வாகனப் பயணத் தொலைவிலுள்ள இத்தோட்டத்திலேயே முகாமிட்டு, ஏற்பாட்டுப் பணிகளைச் சிரமேற்கொண்டு செய்திருந்தது.

 

இருக்குமிடத்தை இன்பமயமாக்கும் பொருட்டு சிக்கன் பார்பிக்யூ சூட்டுக்கறி, இரவுக் குளியலுடன் ஏற்பாட்டுக் குழுவினர் பணிகளைச் செய்திருந்தனர். ஏற்பாட்டுக் குழுவினரின் முந்தை நாள் உணவு ஏற்பாடுகள் அனைத்திற்கும் குழுவினர் தம் சொந்தச் செலவிலேயே முழுப் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

காயலர் ஒன்றுகூடல்:

 

 

நிகழ்வு நாளான 28.08.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 08.00 மணி துவங்கி, 10.00 மணி வரை – மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர். நாற்சக்கர வாகனம் வைத்திருந்தோர் தம் குடும்பத்தினருடன் நிகழ்விடம் வந்தனர். வாகன வசதியற்ற உறுப்பினர்களுக்காக, மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேன் வாகனத்தில் இதர உறுப்பினர்கள் நிகழ்விடம் வந்தனர்.

 

காலைச் சிற்றுண்டி:

 

முற்றிலும் மரங்கள் அடர்ந்து சோலைவனமாகக் காட்சியளிக்கும் இத்தோட்டத்தில், தங்கும் வீட்டின் மாடியிலேயே பலர் குளிக்கும் வகையில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நெடுந்தொலைவிலிருந்து வந்து சேர்ந்ததால் அலுப்பிலிருந்த பலர், வந்த வேகத்தில் குளியல் தொட்டிக்குள் விழுந்து இன்பக் குளியல் நடத்தினர். கட்டிடத்தின் தென்புறத்தில் சுண்டலுடன் சுவையான இஞ்சி தேனீர் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. மறுபுறத்தில், மதிய உணவு ஆயத்தம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

 

பொதுக்குழுக் கூட்டம்:

 

11.45 மணியளவில் மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் துவங்கியது. மன்றத் தலைவர் ‘ஹனீவெல்’ இப்றாஹீம், பொருளாளர் ஜபரூத், அனுசரணையாளர் அப்துர்ரஹ்மான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இளவல் இசட்.என்.அப்துல்லாஹ் ஸாஹிப் உடைய கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் எச்.எல்.அஹ்மத் ஸாலிஹ் ஸஈத் வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார். மன்றத்தின் முன்னாள் தலைவர் பீ.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் கூட்டத்தையும், சிறப்பு விருந்தினர்களையும் அறிமுகப்படுத்திப் பேசினார்.

 

மருத்துவ ஆலோசனை முகாம்:

 

மன்ற உறுப்பினரும், முடநீக்கியல் வல்லுநருமான ஹாஃபிழ் எம்.எம்.டீ.யாஸிர் அரஃபாத், கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் – முடநீக்கியல் (Physiotherapy) துறை தொடர்பான விபரங்களை உள்ளடக்கி விளக்கிப் பேசியதுடன், எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.

 

சிறப்பு விருந்தினர்கள் உரை:

 

இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகரப் பிரமுகர் லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், காயல்பட்டினம் ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அவர்களது உரைச் சுருக்கம் வருமாறு:-

 

லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன்:

 

 

நான் பஹ்ரைன் நாட்டில், நீரியல் துறை வல்லுநராகப் பல்லாண்டு காலம் பணியாற்றினேன். பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் துபை நகரிலும் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அக்காலகட்டத்தில், நம் நகரிலிருந்து வேலை தேடி வந்த சுமார் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க என்னால் இயன்ற வழிகளைக் காண்பித்துள்ளேன். பலருக்கு நானே வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியும் கொடுத்துள்ளேன்.

 

நமதூரில், பாதாள சாக்கடைத் திட்டம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அது நமதூரின் அமைப்புக்கு சிறிதும் பொருத்தமில்லாதது என்றும், பொதுமக்களுக்கு பெரும் அவதிகளையும், செலவுகளையும் ஏற்படுத்திவிடும் என்றும் கூறி, அதற்கான பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டேன். அதன் விளைவாக இன்று நமதூரில் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

 

எஸ்.கே.ஸாலிஹ்:

 

 

இம்மன்றத்தில் கனிசமான அளவுக்கு உறுப்பினர்கள் உள்ளனர். என்றாலும் – இதர மன்றங்களோடு ஒப்பிட்டு, உங்களையே நீங்கள் தாழ்த்திக்கொள்ள எந்த அவசியமும் இல்லை. அவரவர் தகுதிக்கேற்ப நகர்நலப் பணிகளாற்றி வரும் நிலையில், அடிக்கடி இடமாற்றமாகும் நிலையிலிருப்பதால் உங்களாலான பணிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறீர்கள். இவையே போதும் என்று இருந்துவிடத் தேவையில்லை. இன்னும் என்னென்ன செய்யலாம் என முன்பே திட்டமிட்டு பணிகளை வகைப்படுத்தி செய்யலாம்.

 

என்னைப் பொருத்த வரை, வெளிநாடுகளில் பணியாற்றுவதை விட, வளமான வாய்ப்புகள் அமையுமானால் இதுபோன்ற உள்நாட்டு நகரங்களில் பணியாற்றுவதையே நான் மேலாகக் கருதுகிறேன். இது சரியெனப்பட்டால், நமதூரின் தகுதியுள்ள பலருக்கு இந்நகரில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதை இம்மன்றத்தின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதைக் கடந்தாண்டு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது நான் எனது கருத்தாகப் பதிவு செய்தேன்.

 

நாங்கள் படித்த காலத்தில் இதுபோன்ற நல மன்றங்களோ, உதவி செய்யும் அமைப்புகளோ, தங்குமிடங்களோ இல்லாததால், பலருக்குத் தகுதியிருந்தும் மேற்படிப்பு, வேலைவாய்ப்புகள் அமையாமலே போய்விட்டது. இன்றைய மாணவ சமுதயாத்தினர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் இதுபோன்ற நல அமைப்புகளை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்காக அமைப்புகளும் நன்றாகப் பயன்படும் வகையில் தம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

அந்த வகையில் நமது பெங்களூரு காயல் நல மன்றத்தால், இங்கு கல்வி – வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக வருவோர் தம் தேவை நிறைவேறும் வரை தங்கிட மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி இல்லத்தாரின் உதவியில் விடுதியை ஏற்பாடு செய்துள்ளனர். இருந்தும், தகுதியுள்ளவர்கள் இதைப் பயன்படுத்திக்கொள்வது மிகவும் குறைவாகவே உள்ளது என்பது மிகுந்த வருத்தமளிக்கக் கூடியதாக உள்ளது.

 

வெளிநாடுகளில் பல்லாண்டு காலமாகப் பணியாற்றி பலரும் கூட இன்று தாயகத்தை நாடி வந்துகொண்டிருக்கையில், இன்றளவும் மாணவர்கள் பலர் எட்டாத வாய்ப்புகளை எதிர்பார்த்து வெளிநாடுகளுக்குப் படையெடுப்பதை விட, இதுபோன்ற நகரங்களில் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதே சிறந்தது என்று கருதுகிறேன்.

 

வெளிநாடுகளில் கிடைக்கும் ஊதியம் வேண்டுமானால் கண்ணுக்குப் பெரிதாகத் தெரியலாம். ஆனால் அங்கு ஏற்படும் செலவினங்களைக் கழித்துப் பார்க்கையில், கையில் எஞ்சும் தொகை, உள்நாட்டில் ஈட்டுவதைப் போலத்தான் உள்ளது என்பதை அறியும்போது, இவ்வளவு அவதிகள் தேவைதானா என்று நினைக்கத் தோன்றுகிறது.

 

இன்று உலகில் நாகரிகம் வளர வளர, மனிதன் செயற்கை முறையிலான வாழ்வியலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வருகிறான்.

 

இயற்கையான உணவுப் பதார்த்தங்கள் இன்று மங்கிப்போய், உறைகளில் அடைக்கப்பட்ட – வேதிப் பொருட்களால் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவே முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

கொஞ்சம் சாப்பிட்டாலும், தமது உடலியக்கத்தால் ஓரளவுக்கேனும் வியர்வையைச் சிந்தியவர்கள், இன்று மின் விசிறிகளின் அடியிலும், ஏசியால் குளிரூட்டப்பட்ட அறைகளிலும் தஞ்சமடைவதால், உலகின் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, மரம் (வானம்) உள்ளிட்ட எதுவுமே அவர்களின் மேனியில் படுவதில்லை. குறிப்பாக, காயல்பட்டினத்தில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள் பலர் மீது சூரிய ஒளி படுவதேயில்லை.

 

நீண்ட தொலைவாக இருந்தாலும் ஆர்வத்துடன் நடந்த பெண்கள் இருந்த காயல்பட்டினத்தில், இன்று சிறிய வேலையாக இருந்தாலும் கூட அதற்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் உதவியின்றி அந்த வேலையை நினைத்துக் கூடப் பார்க்க இயலாத நிலையில் நம் பெண்கள் உள்ளனர்.

 

உடலின் பசி, தாகம், உறக்கம், ஓய்வு ஆகியவற்றைக் கவனித்து – உடலின் மொழியறிந்து செயல்பட்டால் எல்லாப் பிணிகளும் இல்லாமல் போகும். உடலில் தேங்கும் கழிவுகளே நோய்கள். எனவே, அக்கழிவுகள் நீக்கப்பட்டால் உடல் நலன் பாதுகாக்கப்படும்.

 

உடற்கழிவுகள் – மலம், சிறுநீர், வியர்வை, சளி உள்ளிட்டவற்றின் வழியே அடிப்படையாக வெளியேற்றப்படுகிறது. ஆனால், நாம் ஒரு வேளை சாப்பிட்ட பின், அடுத்த வேளை பசிக்காத நிலையிலும் – கடிகாரத்தைப் பார்த்து சாப்பாட்டு நேரத்தைக் கணக்கிட்டு உண்கிறோம். பசிக்காத நிலையில் சாப்பிட்டதால், ஏற்கனவே சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல், உடலில் கழிவாகத் தேங்குகிறது. அக்கழிவுகள் பிற்காலத்தில் பல்வேறு நோய்களை உடலில் வெளிப்படுத்தி, உடல் நலனைக் கெடுக்கிறது.

 

இதைத் தவிர்க்க,

 

பசியெடுத்தால் மட்டுமே சாப்பிடுவேன்! பசிக்காமல் சாப்பிட மாட்டேன்!!

தாகித்தால் மட்டுமே தண்ணீர் குடிப்பேன்! தாகமின்றி நீரருந்த மாட்டேன்!!

எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்குவேன்! உடலுக்கு ஓய்வு தேவைப்பட்டால் வேலையை நிறுத்தி ஓய்வெடுப்பேன்!!

கண்ட நேரத்திலும் உறங்க மாட்டேன்! உறக்கம் வந்தால் உடனேயே உறங்கிவிடுவேன்!!

என்ற நிலைப்பாட்டை மனதில் அழுத்தமாக ஏற்றி, வாழ்வில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால், உடல் நலன், மன நலன் இரண்டும் நன்றாகப் பாதுகாக்கப்படும்.

 

படுத்தவுடன் உறக்கம் வந்தால் மனம் நலமுடன் இருக்கிறது என்றும், கழிப்பறை சென்றவுடன் சிரமமின்றி மலம் வெளியேறினால் உடல் நலமுடன் இருக்கிறது என்றும் அறிந்துகொள்ளலாம்.

 

பல வல்லுநர்கள் மூலம் தேடிப்பெற்றுள்ள இந்த அறிவுரைகளை – இந்த அழகான வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் அனைவரது நலவாழ்வுக்கான எனது அன்பளிப்பாக வழங்கி உரையை நிறைவு செய்கிறேன்.

 

இவ்வாறு சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினர்.

 

நினைவுப் பரிசுகள்:

 

 

 

சிறப்பு விருந்தினர்கள் இருவருக்கும் மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது.

 

நன்றியுரைக்குப் பின், துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.

 

குளியல்:

 

 

மதிய உணவு ஆயத்தமாக உள்ளதாகவும், குளியல் – ளுஹ்ர் தொழுகையை நிறைவேற்றிய பின் அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்படவுள்ளதாகவும், இடைப்பட்ட நேரத்தில் மகளிருக்கு விருந்துபசரிப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆண்கள் அனைவரும் குளியல் தொட்டிக்குள் இறங்கி, நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.

 

ளுஹ்ர் தொழுகை:

 

குளியலை முடித்துக்கொண்டு, அனைவரும் ளுஹ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றினர்.

 

மதிய உணவு விருந்துபசரிப்பு:

 

இப்பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் ஊரிலிருக்கும் மகிழ்ச்சியை அளிப்பதற்காக, காயல்பட்டினத்திலிருந்து சமையலர் வரவழைக்கப்பட்டு, உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

 

 

 

காலை உணவாக சிக்கன் சேமியா, மதிய உணவாக காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு ஆகியவற்றையும், காயல்பட்டினத்தின் இஞ்சி தேனீரையும் அவர் ஊரின் சுவை மாறாது நிறைவாக தயாரித்திருந்தது, பங்கேற்ற அனைவருக்கும் – குறிப்பாக மகளிருக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது. ஸஹன் முறையிலும், தனித்தட்டுக்களிலும் அனைவரும் மதிய உணவுண்டனர்.

 

பெரியோர் – மழலையருக்கான பல்சுவைப் போட்டிகள்:

 

பின்னர், மன்ற உறுப்பினர்கள், மகளிர், மழலையருக்கான பல்சுவைப் போட்டிகள் நடத்தப்பட்டது. மழலையருக்கான போட்டியின்போது ஒன்று சிரிக்க, ஒன்று அழ, ஒன்று சுட்டித்தனம் செய்ய, ஒன்று கோபத்தை வெளிப்படுத்த என வெவ்வேறு குணங்களுடனான மழலையரின் நடவடிக்கைகள் அனைவரது கண்களுக்கும் விருந்தளித்தன.

 

 

 

இசைப் பந்து (Musical Ball), Lemon on Spoon ஓட்டப் பந்தயம், பலூன் உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் அவரவர் வயதுக்கேற்ப – மழலையர், சிறுவர் – சிறுமியர், இளைஞர்கள், பெரியோர் என பல பிரிவுகளாக நடத்தப்பட்டன. வெற்றிபெற்றோர் கூட்டத்தில் பாராட்டப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மழலையர், சிறுவர் – சிறுமியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை, மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.

 

அஸ்ர் தொழுகை மற்றும் மாலை சிற்றுண்டி:

 

அனைவரும் அஸ்ர் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றினர். அனைவருக்கும் இஞ்சி தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

 

காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி சுவையான உணவுகளை சமைத்தளித்தமைக்காக, காயல்பட்டினத்தைச் சேர்ந்த சமையலர் முத்துவாப்பாவுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 

மஃரிப் தொழுகை:

 

18.30 மணியளவில் மஃரிப் தொழுகையை நிறைவேற்றிய பின், குழுப்படம் எடுத்துக் கொண்டவர்களாக, பிரிய மனமின்றி அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
நிலைப்படம் மற்றும் தகவல்: S.K.Salih