காயல்பட்டினத்தில் 23நவம்பர்,2012 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள kayalconnection.com இணையதளத்தின் பொறுப்பாளர், இணையதளத்தில் இடம் பெற்றுள்ளவை பற்றி விடுத்துள்ள அறிக்கை:-
அன்பார்ந்த காயலர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
வல்ல இறைவனின் நல்லருளால் துவக்கப்பட்டுள்ள kayalconnection.com இணையதளம் பற்றி, உங்களில் பலர் எங்களைத் தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கும் அன்பார்ந்த வாழ்த்திற்கும், பாராட்டுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
எம் இணையதளம் சம்பந்தமாக நீங்கள் வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கு உரிய மதிப்பளித்து, பரிசீலனைக்குப் பிறகு அமுல்படுத்துவோம் என உறுதியளிக்கிறோம்.
எமது இணையதளத்தின் முகப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ள பள்ளிவாசல்களின் தொடர்ச்சியாக இதுவரை இடம்பெறாத எஞ்சியுள்ள பள்ளிவாசல்களின் படங்களும் ஒவ்வொன்றாக அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும்.
வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் ‘விரைவில்‘ எனக்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் உரிய நேரத்தில் நிரப்பப்படும்.
‘மற்றவை’ எனும் தலைப்பில் ‘அசைபட நேரலைப்’ பிரிவையும் மற்றும் விளம்பரப் பகுதியில் உள்ள படத்தையும் அழுத்தினால் (கிளிக் செய்தால்) அவை அசைபடமாக (வீடியோவாக) விரியும். வரும் காலங்களில் அசைபட நேரலை அவ்வப்போது இடம் பெறும்.
ஒவ்வொரு செய்திக்கும் கீழே அறிவிக்கப்பட்டுள்ள முறையில் செய்திகளுக்குண்டான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
செய்திகள் அல்லாத பகுதிகளுக்கு நீங்கள் எழுத விரும்பும் கருத்துக்களை kayalconnection@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
வெளியூர், வெளிநாடுகளில் இயங்கும் காயல் நல மன்ற நிர்வாகிகளே! உங்கள் அமைப்பின் இருப்பிட முகவரி, தொடர்பு முகவரி, மின்னஞ்சல்(E-mail) விபரம், தொடர்புக்குரிய தொலைபேசி எண், நிர்வாகிகள் பட்டியல் மற்றும் தங்கள் மன்றம் சார்ந்த தகவல்களை எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்.
தங்கள் அமைப்பின் நோக்கம் மற்றும் இதுவரை ஆற்றிய பணிகளின் சுருக்கத் தொகுப்பு இவைகளை அனுப்பி வையுங்கள். இதன்மூலம் காயல் அமைப்புகள் பகுதியில் தங்கள் மன்றம் இடம்பெற உதவிடுமாறு வேண்டுகிறோம்.
நேயர்களே! நிறைவிருந்தால் பாராட்டுங்கள். குறைவிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். ஏற்கின்றோம். வாழ்த்துக்கு நன்றி! வாஞ்சையுடன் கூடிய பரிந்துரைக்கும் நன்றி! மீண்டும் சந்திப்போம். இன்ஷாஅல்லாஹ்.