காயல்பட்டினத்தில் 2011 ஆம் ஆண்டு, ஜூலைத் திங்கள், 8,9,10 ஆகிய மூன்று நாட்களில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் தனது 15 ஆம் ஆண்டு இலக்கியப் பெரு விழாவை நடத்தியது. சீருடன் நடந்தேறிய அவ்விழாவில், சமூகத்தில் சாதனைப் புரிந்தோர் சிலருக்கு சேவைச் செம்மல் எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விருது வழங்கப்பட்டோரில் காயல்பட்டினத்தில் கடந்த 40 ஆண்டுக் காலத்திற்கும் மேலாக ,சன்மார்க்கப் பணியாற்றும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்ஹாஜ் நஹ்வி I.L. நூருல் ஹக் அவர்களும் ஒருவராவார். விருது பெற்ற முதல்வரைப் பாராட்டி கல்வி நிறுவனத்தின் அந்நாள் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் விழா எடுத்து மகிழ்ந்தனர்.
பாராட்டுக்குரியப் பணியாற்றும் முதல்வரை வாழ்த்தி ,அவரிடம் பயின்ற சகோதரர் முஸ்தாக் அஹ்மத் அவர்கள், விழாவில் வழங்கிய வாழ்த்துக் கவிதையை சகோதரர் D. சேக் அப்பாஸ் பைசல் அவர்கள் தகவலாக தந்துள்ளார்கள் . அதை மகிழ்வுடன் நேயர்களுக்கு வழங்குகிறோம்.
கவிதைக் குறித்த தங்கள் கருத்தை இதன் கீழ் பதியவும்.
மிகவும் அழகான அதுவும் அருமையான கவிதை.
கவிதை எழுதியவருக்கும் இந்த விருதுக்கு உரியவர்களான முதல்வர் ஹாஜி நூருல் ஹக் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எந்நாளும் உங்களை சிறப்பாக்கி மகிழ்வுடன் வாழ வைப்பானாக! ஆமீன்.
வாழ்த்தவேண்டியது நூருல் ஹக் அவர்களையா? அல்லது அவரை கவிதையாக வார்த்து தந்த தம்பி முஸ்தாக் அவர்களையா?
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று ஒரு போஸ்டர்…வாழ்த்தி வணங்குகிறோம் என்று இன்னொரு போஸ்டர்…. இந்த காலத்தில் வாழ்த்துக்கள் இப்படி கன்னாபின்னாவென்ற உளறல்களாகவெளிப்பட்டுக் கொண்டிருக்கிறதை நாம் பார்க்கிறோம்.
விளம்பர வெளிச்சத்துக்கு வராமல் ஒரு உயரம் குன்றிய உருவம் இஸ்லாமிய விழுமியங்களை விதைக்கும் ஒரு பல்கலைக் கழகத்தின் உயரத்தில் சப்தமில்லாமல் நிற்கின்றதே அவரை கவிதையாக வடித்த சகோதரருக்கும் வாழ்த்துக்கள். பெயருக்கு பொருத்தமாக அமைந்துள்ள அவர் சேவை போற்றுதற்குரியது.
சேவை செம்மல் என்று ஒரு இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம் கொடுத்த விருது என்று இங்கே குறிப்பிட்டிருக்கிறார்கள் அப்படியானால் இந்த மண்ணின் மைந்தருக்கு இங்குள்ள மக்கள் என்ன விருது கொடுத்து கௌரவிதுள்ளார்கள் என்ற ஐயப்பாடு எழுகிறது.
”சேவல் கூவிய பின்னர்தானே விடிந்தது பொழுதெனக் கண்டேன்” என்று காயல் ஷேய்க் முஹம்மது படுவாரே அப்படித்தான் நாமும்.
”நான் இறந்த பிறகு எனக்கு ஒரு தாஜ்மஹால் கட்டவேண்டாம் நான் இருக்கும்போது வசதியாக வாழ ஒரு குடிசை கட்டி தாருங்கள் அது போதும்” என்று ஒரு புது கவிதை சொல்கிறது .அந்த புது கவிதைக்கு செயல் வடிவம் கொடுக்க நாம் தயாராகுவோமா….
ஏழு சுவரங்களில் எத்தனை ராகம்..புல்லாங் குழலில் காற்று நுழைந் தால் புது புது இசையாகும் என்ற பாடல்களை ரசித்து வந்த நமக்கு யா ரசூலுல்லாஹ் யா ஹபீபல்லாஹ் யா நபிய்யல்லாஹ் யா ஷபீஅல்லஹ் என்று ஒரு சுவர்க்க நாதத்தை கற்றுத்தந்த மருமகன் நூருல் ஹக் அவர்களுக்கு நமதூர் மக்கள் சேர்ந்து ஒரு விழா எடுக்க வேண்டும் விருது வழங்க வேண்டும்.
”என்ன கொடுப்பான் எது கொடுப்பான் என்று நினைக்கும் முன்னே பொன்னைக் கொடுப்பான் பொருளைக் கொடுப்பான் போதாது போதாது என்றால் இன்னும் கொடுப்பான் தன்னையே தான் கொடுப்பான்”. கர்ணன் என்ற வள்ளலை பற்றி இப்படி பாடுவார்கள்.
நமதூரில் உள்ள வள்ளல்கள் இவரின் தேவை அறிந்து அதை ரகசியமாக செய்து முடிக்க வியூகம் வகுக்க தம்பி முஸ்தாக் அஹ்மத் அவர்கள் கவிதை ஒரு அமைதியான உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.
நூருல் ஹக் அவர்கள் வாழ்க பல்லாண்டு அவர் சேவை தொய்வில் லாமல் நின்று நிலை பெற ஹாமிதிய்யாவின் இளவல்கள் அவருக்கு தோள் கொடுக்க அல்லாஹ் அருள் புரிவானாக.
வாழ்த்துவதற்கு வயதும் தேவை இல்லை வணங்கவும் தேவை இல்லை உயர்ந்த உள்ளம் இருந்தால் போதும். வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் உள்ளத்தனையது உயர்வு என்று வள்ளுவம் சொல்கிறது.
எனக்கு வாழ்த்த வயதும் இருக்கிறது தகுதியும் இருக்கிறது அந்த கடமை யும் உரிமையும் கூட எனக்கு இருக்கிறது என்று சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள்…இதயம் நிறைந்த து ஆக்கள்….