CSK THAILAND கிரிக்கெட் கிளப் துவக்க விழா நிகழ்ச்சி கடந்த திங்கள் கிழமை மாலை 4 மணி அளவில் TGJTA (THAI GEM AND JEWLERY TRADERS ASSOCIATION ) யின் அரங்கில் நடைபெற்றது. ஆரம்பமாக இந்நிகழ்ச்சியை ஹாஜி வாவு ஷாகுல் ஹமீத் அவர்கள் இறைமறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்கள். ஹாஜி வாவு சம்சுதீன் அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்நிகழ்ச்சியை ஹாஜி ராஜா முகம்மது அவர்கள் வரவேற்று பேசினார்கள்.
இதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டTGJTAயின் President Mr.Somchai மற்றும் அதன் உறுப்பினர்களும், TMA (Tamil Muslim Association) உறுப்பினர் பலரும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த ( CSK THAILAND கிரிக்கெட் கிளப் ) அணியில் நமதூரை சேர்ந்த 6 வீரர்கள் விளையாடுவது குறிப்பிடத்தக்கது
1.Haji Wavoo MAS Shahul Hameed
2.Haji Wavoo AS Mohamed Ali
3.MBS Shaik Abdul Cader.
4.SH Magdoom Mohamed
5.Wavoo S Magdoom
6.SA Ahamed Irfan
சிறப்பு பதக்கம்
கடந்த ஆண்டு தாய்லாந்து நாட்டின் தேசிய அணிக்கு விளையாடியதற்காக MBS Shaik Abdul Cader சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.மேலும் சென்ற ஆண்டு Bangkok Cricket Leagueல் சிறப்பாக விளையாடியதற்காக Wavoo S Magdoom Mohamed அவர்களக்கும் சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.
இலச்சினை
CSK Thailand கிரிக்கெட் கிளபிர்க்காக புதிய இலச்சினை உருவாக்கி தந்த THAKWAஅமைப்பின் உறுப்பினர் Wavoo MN Kader Sahib அவர்களக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக பாத்திஹா துஆவுடன் இனிதே நிறைவுபெற்றது
வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
தகவல் : –
Ahamed Irfan