ரியாதில் இருந்து, நமதூர் பெரிய நெசவு தெருவைச் சேர்ந்த , சகோதரி சல்மா பர்ஸானா அனுப்பி வைத்துள்ள
கவிதையைக் காண ,
இங்கே அழுத்தவும்
இதற்கான கருத்துக்களை இதன் கீழ் பதியவும்
ரியாதில் இருந்து, நமதூர் பெரிய நெசவு தெருவைச் சேர்ந்த , சகோதரி சல்மா பர்ஸானா அனுப்பி வைத்துள்ள
இதற்கான கருத்துக்களை இதன் கீழ் பதியவும்
முற்றத்தில் ஆறும் ஆறுபதும் ஆடிப் பாடக் கண்டேன். நல்ல வரிகள்
அல்ஹம்துல்லில்லாஹ்.
நம் ஊரை பொறுத்த வரை மகள் பிள்ளையுடனோ, மகன் பிள்ளையுடனோ அன்பாகவும், பாசமாகவும் விளையாடும் பெரியோர்களை காண முடிகிறது.
அந்த அரவணைப்பு மற்ற பகுதியில் தற்போது காணமுடியவில்லை என்ற வருத்தம் உங்கள் கவிதையில் தெரிகிறது.
அபூபக்கர், ரியாத்.
காயல் தந்த கவிமகளே ! நீ கண்டெதெல்லாம் கனவோ என்ற ஐயம் வேண்டாம் உனக்கு .
வருங்காலம் என்ற யுகத்தில் இதுவெல்லாம் நிஜமே .உன்னுடைய கவிதை பல்லாயிரம் மடங்கு உயர்வானது .
Vilack SMA
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக! உங்கள் பெட்டகத்தை திறந்து பொருளை அள்ளி தருக! புது வரவுக்கு வாழ்த்துக்கள்.
ஆணாதிக்கம் நிறைந்துள்ள காயல்பதியில் ஒரு புதிய வழித்தடம்.
வரகவி காசிம் புலவர் முதல் வரையற்ற கவிகளை உலகுக்கு அறிமுகப் படுத்தி தனக்கு புகழ் சேர்த்த காயல் நகர், இது வரை ஒரு பெண் கவியை நமக்கு தந்ததாக எனக்கு வரலாற்றுக் குறிப்புக்கள் ஏதும் கிடைக்கவில்லை.
உங்கள் கவிதை நயம் சொற்சுவை பொருட்சுவை நிறைந்ததாக களம் இறங்கினாலும், நிறைவேறாத கனவுகளுடன் அது அரங்கேறி இருக்கிறது.
நீங்கள் ஆசைப் படும் இவ்வளவும் நனவுகளாக இருந்த காலம் நபிகள் நாயகம் அவர்கள் நுபுவ்வதுக்குப் பின் ஆரம்பித்து நபி தோழர்கள் வாழ்ந்து முடிந்த காலங்கள் வரை இருந்தது.
படி படியாக அய்யாமுல் ஜாஹிலிய்யதை நோக்கி இந்த சமுதாயம் பின்னோக்கி வேகமாக சென்றபோது அவை மீண்டும் கனவுகளாகி காணாமல் போய்விட்டன என்பதுதான் நிதர்சன உண்மை.
கனவுகள் நம் தூக்கத்தை தொலைத்து விடும் நாம் கொண்ட கொள்கையில் முன்னேறி செல்ல நம்மை தூண்டிக் கொண்டே இருக்கும்.
சகோதரியின் கனவு கலைந்தாலும் பெண்கள் இந்த கனவுகளை வாழ்க் கையின் இலட்சியங்களாக ஆக்கிக் கொள்ள சபதம் எடுத்துக் கொண்டால் நிச்சயம் மீண்டும் அந்த கனவுகள் நனவுகளாக இறைவன் துணை நிற்பான்.
தொடர்ந்து உங்கள் கவிதைகளை வெளிப் படுத்தி உங்களுக்குள் புதைந்து கிடக்கும் ஒரு காயல் பெண்கவிமணியை இந்த சமுதாயத்துக்கு அடையாளம் காட்டுங்கள்.
உங்கள் கவிதையின் ரசிகன்
மக்கி நூஹுத்தம்பி மின்னஞ்சல் mackiealim97@gmail.com
ஆஹா !!! அருமையான கவிதை…
காயலில் ஒரு பெண் கவி !!!! அதை காயல் கனேக்சன் வாசகர்கள் அனைவரும் கவனி !!!
சகோதரி – இன் கவிதை நடை என்னையும் அந்த கனவுலகிற்கு சிறிது நேரம் அழைத்து சென்று விட்டது .
கவிதையை படித்த பிறகு கனவுலகில் இருந்து வெளிவர எனக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
இப்படி ஓர் உலகிருந்தால் எப்படியிருக்கும்!!!
“கண்டதெல்லாம் கனவோ என்ற ஐயம் எழவே கண்விழித்தேன் தூக்கத்திலிருந்து” என்று சகோதரி குறிபிட்டு இருந்தார்.
அவரின் கனவை கலைத்தது யாரோ ???? இன்னும் சிறிது நேரம் அவர் கண்ணுறங்கிருக்கலாம் என்றே என்ன தோன்றுகிறது.
“பெண் கவியின் நற் கவிகள்” இந்த இணயதலத்தில் மேலும் உலா வர வாழ்த்துக்கள்!!!
சகோதரின் கவிதைகளை ஆவலோடு நோக்கும்
மரியம் அபியா
சகோதரி கண்ட கனவு முன்னர் இருந்தது ( ஒரு 20 வருடங்களுக்கு முன்).ஏன் என்றால் பெரியோரின் வழிகாட்டல், முஹல்லா ( ஜமாஅத் ஒற்றுமை ),நம்மை எல்லாம் சீர் படுத்தியது.
ஆனால் இன்று நமக்குள் ஒற்றுமையை சீர் குலைக்கும் சில இயக்கங்கள் முஹல்லாவில் விரும்பதகாத,அவசியமில்லாத சிலவிசயங்களை உண்டாகி ஜமாஅத( முஹல்லா )என்ற கட்டுபாட்டை உடைத்து,
ஒற்றுமைக்கு உலைவைத்து, குடும்பங்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தியதின் விளைவு சகோதரியின் கவிதையின் ஆதங்கம் வெளி படுகிறது என்றுஎண்ணு கிறேன்.
சகோதரியே! நின் கனவு நனவாகட்டும். ஒற்றுமை ஓங்கி வளரட்டும்.
கவிதை எழுதிய சகோதரியை மனமார வாழ்த்துகிறேன்.நின்று நிலவட்டும் நின் கவிதை தொடர்.
சஹோதரியின் கவிதையில் அனைத்தையும் கண்டேன். ஆனால் இன்னும்
நமக்குள் ஏன் ஒற்றுமையை காணவில்லை? மிக அற்புதமான, ஆழமான,
அர்த்தமுள்ள கவிதை.
மென்மேலும் கவிதை நயெம் வளர வாழ்த்துக்கள்
N T SULAIMAN (ABU MUFEES )
ஒரு நெசவு – நூலாகக் கண்டேன்
ஒரு பெண் கவிஞர் நமதூரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். இதுவும் கூட ஒரு கனவோ என்று எண்ண தோன்ற்கிறது. கவிமொழி சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
2014 இன் புதிய வார்ப்பாய் இவர்கள் கவிதையை எடுத்துக் கொள்வதா அல்லது 1435இன் புதிய வரவாய் இவர்கள் கவிதையை வரவேற்பதா அல்லது அப்துல் கலாமின் கனவு காணுங்கள் என்ற அறிவுரையின் வெளிப்பாடாக இந்த கவிதையை அணுகுவதா
எப்படிப் பார்த்தாலும் சகோதரியின் கவிதை நயத்தை பாராட்ட முடியுமே தவிர அவர் கண்ட கனவு மெய்ப்பட, நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்து வழிகாட்டிய காலத்துக்கு நாம் செல்ல வேண்டும்.
அவர்களுக்குப் பிறகு வாழ்ந்த கலீபாக்கள் காலத்துக்கு செல்ல வேண்டும். அய்யாமுல் ஜாஹிலிய்யா .அது நபியின் நுபுவத்துக்கு முந்திய நூற்றாண்டு களிலும் இருந்தது. இந்த நூற்றாண்டுகளிலும் இருக்கின்றது.
எனவே சகோதரி அவர்களே! இப்படி துடிப்புள்ள கவிதைகளை தொடர்ந்து எழுதுங்கள்.ஆனால் கனவுக் கவிதைகள் நனவாக வேண்டும் என்று ஆசைப் படாதீர்கள் ,அவை ஓசை இல்லாமல் ஓரிடத்தில் ஒதுங்கி விடும். நம் இஸ்லாமிய சமுதாயம் அந்த கனவிலிருந்து வெகு தூரம் வேறுபட்டிருக் கிறது – கூறுபட்டிருக்கிறது .
தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசியிருக்கும்.
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்.
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக .வாழ்க.
உள்ளப் பூரிப்புடன்,.
மக்கி நூஹுத்தம்பி மின்னஞ்சல்: mackiealim97@gmail.com