எல்.கே. மேனிலைப் பள்ளி
காயல்பட்டினம் எல்.கே. மேனிலைப் பள்ளியின் 2012ம் ஆண்டிற்கான வருடாந்திர விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி (Annual Sports Meet 2012) நடைபெற்றது.
7-12-2012 அன்று எல்.கே. மேனிலைப்பள்ளி ஹாஜி எஸ்.ஏ. மீராசாகிபு நினைவரங்கத்தில் மாலை 4 மணிக்கு பள்ளியின் தலைவர் டாக்டர். எம்.எஸ். அஷ்ரப் M.D. தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
kayalconnection.com நிறுவனர் ஹாஜி.எஸ். அக்பர்ஷா B.A. துணைத்தலைவராக விளங்கும் இப்பள்ளியில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மற்றொரு துணைத் தலைவர் ஹாஜி எஸ்எம். உஸைர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஜனாப். எல்.கே. லெப்பைத் தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவர் முஃபீஸ்ரஹ்மான் திருமறை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் எம்.ஏ. முஹம்மது ஹனீபா M.Sc., M.Ed. வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட உரிமையியல் நீதிபதி திருமிகு. கே.விவேகானந்தன் B.A.B.L. சிறப்புரை ஆற்றி, விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
பள்ளி நிர்வாகி ( Correspondent ) டாக்டர். எஸ்.எம். முஹம்மது லெப்பை M.B.B.S., D.V., வாழ்த்துரை வழங்கினார். பள்ளி ஆசிரியர் டேவிட் செல்லப்பா நன்றி கூற, நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.
முன்னதாக 5-12-2012 அன்று விளையாட்டுப் போட்டிகள் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் ( U.S.C ) நடைபெற்றன.
நிழற்படம் : முதன்மைச்செய்தி முகவர் ( kayalconnection.com ) மற்றும் வீனஸ் மணி.