Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
08:48 pm
Sunday, 19 May 2019
Top

ஐந்து ஏக்கர் நிலம் கேட்டு ஐக்கியப்பேரவைக்கு வேண்டுகோள்



நமது நகர எல்லைக்குள் தேங்கும் குப்பைகள், இதுவரை தனியார் நிலத்திலேயே கொட்டப்பட்டு வருகிறது அப்பகுதியில் துணைமின் நிலையம், அமைக்கும் பணி துவங்கி, அது இயங்கும் கட்டத்தை எட்டியுள்ளது மேலும் அவ்வட்டாரத்தில் தனியார் வீடுகளும் வரத் துவங்கியுள்ளன.

 எனவே சில மாதங்களுக்கு முன்பு நகர மக்களுக்கு, நிலம் வேண்டி நகராட்சி விடுத்த வேண்டுகோள் ஏற்க தாமதம் ஆவதால், நகர்மன்றம் மீண்டும் அவ்வேண்டுகோளை புதுப்பித்துள்ளது.இந்நிலையில் இதற்கென நகராட்சிக்கு சொந்தமாக, ஊரின் ஒதுக்குப் புறத்தில் 5 ஏக்கர் நிலம் அவசியமாகிறது. மேலும் இந்நிலம் குப்பை கொட்டுவதற்கென அமையுமானால், இந்நிலத்திற்குள்ளேயே, 90 லட்சம் செலவு மதிப்பீட்டில், அரசு தரமுன்வரும் இயற்கை எரிவாயு மையம்     ( BIO METRIC GAS PLANT ) அமையும் அரிய வாய்ப்பும் உருவாகும்.

30-11-2012 அன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தின் 65 ஆம் தீர்மானத்தின் படி, நிலம் வாங்க அரசு தர முன்வரும் ரூபாய் 5 லட்சம், 5 ஏக்கர் நிலம் வாங்க போதாது என்பதால்,  அரசிடம் 5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை கேட்டு விண்ணப்பிப்பதோடு, தன்னார்வத்தொண்டு அமைப்புகளிடமும் இதே கோரிக்கையை முன்வைப்பதெனவும் முடிவு எடுக்கப்பட்டது.

 அம்முடிவின் அடிப்படையில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிற்வாகிகளை நேரடியாக சந்தித்து, இதற்குரிய வேண்டுதல் மனுவை, பேரவையின் ஒருங்கினைப்பாளர் ஹாஜி. S.S.M முஹம்மது இஸ்மாயீல்( முத்து ஹாஜி ) அவர்களிடம் கைஅளித்தனர்.

இந்நிகழ்ச்சி 06-12-2012 வியாழன் மாலை 5.30 மணியளவில் பேரவையில் இடம் பெற்றது. மனுவை பெற்று கொண்ட பிறகு, உடனிருந்த நிர்வாகிகள், ஆவண செய்வதாக வாக்களித்தனர்.

17  உறுப்பினர்கள் கையெழுத்து இட்டுள்ள, இம்மனுவை 13 உறுப்பினர்கள் பேரவையில் சமர்பித்தார்கள் வெளியூரில் உள்ள ஒரு உறுப்பினர் தொலைபேசி வாயிலாக தனது வேண்டுகோளை பதிவு செய்தார்.

அவசரமாகவும், அவசியமாகவும், தேவைப்படும் இந்நிலத்தை அரசோ, ஐக்கிய பேரவையோ வழங்கட்டும். விரைவில் செயல்வடிவம் பெற நாம் அனைவரும் துணை நிற்போம்

நிழற்படம் : முதன்மைச்செய்தி முகவர் ( kayalconnection.com )

தகவல் உதவி : M.A.K. ஜைனுல் ஆப்தீன் – பேரவை இணையதள ஒருங்கினைப்பாளர்

மற்றும் திரு.சாமி – நகர்மன்ற உறுப்பினர். 

 

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


3 Comments to “ஐந்து ஏக்கர் நிலம் கேட்டு ஐக்கியப்பேரவைக்கு வேண்டுகோள்”

  1. NIZAR  , India    IP : 115 .  .  . 
    says:

    நகர்மன்றம், குப்பை கொட்டுவதற்காக ஐந்து ஏக்கர் நிலத்தை காயல் நகரின் அணைத்து ஜமாத்துகளின் கூட்டமைப்பான ஐக்கிய பேரவையிடம் வேண்டுகோள் வைத்து இருப்பது நல்ல முயற்சியாகும்.

    இந்த மாதிரியான பெரிய விசயங்களை சிறு அமைப்புகள்,தனி இயக்கங்கள்,போன்றோர்களிடம் எடுத்து செல்வதை விட, ஊரின் அனைத்து ஜமாத்களின் பிரதிபலிப்பாக இருக்கிற ஐக்கிய பேரவையே இதற்குரிய பொருத்தமான அமைப்பாகும்.

    ஏற்கனவே தமிழ்நாடு மின்சார வாரிய துணை மின் நிலையத்துக்கு, பல லட்சம் செலவில் ஐக்கிய பேரவை இடம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    எனவே இந்த வேண்டுதலை, ஐக்கிய பேரவை கனிவாக பரிசீலனை செய்து, ஆவன செய்யும் என நம்புகிறேன். தொடர் சேவை செய்யும் ஐக்கிய பேரவைக்கு வாழ்த்துகள்.

  2. mackie noohuthambi  , India    IP : 117 .  .  . 
    says:

    நல்ல செய்தி. பாராட்டுக்குரியது.நகரமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையை, ஐக்கிய பேரவை உறுப்பினர்கள் பரிவுடன் பரிசீலித்து, எல்லோரும் ஒன்று சேர்ந்து, இந்த நல்ல திட்டம் வெற்றி பெறவும், சுற்று சூழல் மாசு இல்லாத காயல்பட்டனமாக நமது ஊர் மாறவும், இது போன்ற நல்ல திட்டங்களை நமது நகரமன்ற தலைவி, உறுப்பினர்கள், ஐக்கிய பேரவை உறுப்பினர்கள் எல்லோரும் முன்னெடுத்து செய்வதற்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.

  3. M Sajith  , United Arab Emirates    IP : 92 .  .  . 
    says:

    நல்ல மாறுதல் என்றுதான் சொல்லவேண்டும்… நல்லது நடக்கும் என்றால் வரவேற்கத்தானே வேண்டும்.!!

    காயலில் வரலாறும் இதுதான். பள்ளிக்கூடங்களும்> பள்ளிவாயில்களும்> கால்பந்து மைதானங்களும்> பைத்துல்மால்களும் நன்மையாக அமையவில்லையா என்ன..?
    சென்ற நகரவை பதவிக்காலத்தில் முடியாமல் போன ஐந்து ஏக்கர் இப்போது முடியும் என்றால் நல்லதுதானே!

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2019 © kayalconnection.com