ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் மாநகரில் காயல் நல மன்றத்தின் கூட்டம் நடைபெற்றது. 02.012.12 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் அல்ஹாஜ் அல்ஹாபிழ் M.A. அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி அவர்கள் தலைமையில், ஹாஜி ஜஹாங்கிர் அவர்கள் இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.
ஹாஜி S.I.அஹ்மது முஹைதீன், ஹாஜி S.L.உஸைர் மௌலானா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அல்ஹாபிழ் M.A.செய்யது முஹம்மது கிராஅத் ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். மன்றத்தின் கடந்த கால செயல்பாடுகளை செயலாளர் M.A.S. அபு தாஹிர் (அபு பாய்) விளக்கினார்.
வருகை தந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றத்திற்குப்பின், புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1. மன்றத்தின் மறைந்த முன்னாள் தலைவர், ஹாஜி முஸ்தபா கமால் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யப்பட்டது.
2. புதிய நிர்வாகக்குழுவை அங்கீகரித்தும், அவர்களின் பதவிக்காலம் இன்ஷாஅல்லாஹ் 31.12.2013 வரை என்றும், அதன் பின்னர் புதிய நிர்வாகக்குழுவை தேர்ந்தெடுக்கவோ அல்லது இக்குழுவுடைய பதவி காலத்தை நீட்டிக்கவோ பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளிப்பது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
3. நமது மன்றத்திற்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி கேட்டு வரும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்ய, அல்ஹாஜ் அல்ஹாபிழ் M.A. அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி, ஹாஜி S.M. காதர், மற்றும் ஹாஜி M.L.சதக்கத்துல்லாஹ் ஆகியோரை நியமித்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
4. தனியார் தொழிற்சாலை மூலம் நமதூருக்கு ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுகளை களைய, நடவடிக்கை எடுக்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது எனவும், இது குறித்து நமதூர் மற்றும் சுற்றுவட்டார மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த அவ்வமைப்புக்கு வேண்டுகோள் விடுத்தும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
5. மன்றத்திற்கு தனி மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்தவும், இனி வருங்காலங்களில் மன்றத்தின் அனைத்து தொடர்புகளும் இதன் மூலமே மேற்கொள்வது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மின்னஞ்சல் முகவரி: Jakwa2012@gmail.com.
M.I. கலிலுர்ரஹ்மான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள். அல்ஹாஜ் அல்ஹாபிழ் M.A. அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி அவர்கள் துஆ ஓதினார்கள். ஸலவாத் கஃப்பாரவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
புதிய நிர்வாகக்குழு:
தலைவர்: அல்ஹாஜ் M.A.S. செய்யது அபுதாஹிர் (அபு பாய்)
துணைத்தலைவர்கள்:
1. அல்ஹாஜ் S.I. அஹ்மது முஹைதீன்
2. அல்ஹாஜ் S.M. தாஹிர்
செயலாளர்: அல்ஹாபிழ் M.A.செய்யது முஹம்மது
துணைச்செயலாளர்கள்:
1. அன்பின் அலாவுதீன்
2. B.M. லுக்மான் மௌலானா
பொருளாளர்: Y.H.M. ஷாகுல் ஹமீது
துணைப்பொருளாளர்கள்:
1.ஹாஃபிழ் M.S. முஹம்மது ஸாலிஹ்
2.O.L. செய்கு அப்துல் காதர்
ஓருங்கிணைப்பாளர்கள்:
1. ஹாஃபிழ் A. இம்தாதுல்லாஹ்
2 .M.A.S. செய்யது அபுதாஹிர்
செயற்குழு உறுப்பினர்கள்:
அல்ஹாஜ் அல்ஹாஃபிழ். B. மீராசாகிபு
ஜனாப் A.M. அப்துர்ரஹ்மான்
ஜனாப் K. ஷாகுல் ஹமீது
ஜனாப் M.I. கலிலுர்ரஹ்மான
அல்ஹாஜ் M.T. அபுல் காசிம் ஆலிம் மஹ்லரி
அல்ஹாஜ் S.M. நுஸ்கி ஹாஃபிழ்
அல்ஹாஜ் M.T. ஜபரூத் மௌலானா
அல்ஹாஜ் M.S. ஹசன் நெய்னா
ஜனாப் N.M. சூஃபீ ஹூசைன்
தகவல்:
அல்ஹாஜ் M.A.S. செய்யது அபுதாஹிர் (அபு பாய்)
தலைவர் ஜக்வா (ஜெய்ப்பூர்)