சமையல் அறை

காயல் தம்மடை

தேவையான பொருட்கள்

ரவை -200கிராம்

மைதா -200கிராம்

நெய் -150 கிராம்

டின்பால் -½ டின்

பசும்பால் -1 லிட்டர் (வற்ற காய்க்கவும்) அல்லது அட்டைப்பாலாக இருந்தால் -200 மி.லி.

சீனி -800 கிராம்;

முட்டை -3 அல்லது 4எண்ணம்

தேங்காய் (பெரியது) -4எண்ணம்

ஏலம், மேவா(பாதம், பிஸ்தா, முந்திரி பருப்பு, சாரபருப்பு) தேவையான அளவு

கிண்ணிகளுக்குத் தடவ நெய் கொஞ்சம்.

செய்முறை:

ரவையை தலைப்பாலுடன் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு திரித்த சீனியையும், மைதாவையும் போட்டு ¼ மணி நேரம் ஊற விடவும். பிறகு மற்ற பொருட்களை போட்டு கலந்து கொள்ளவும். பிறகு ஓவனில் சிறு சிறு கிண்ணிகளில் (அல்லது அச்சுகளில்) ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

( 23-11-2012 )