சமையல் அறை

காயல் களறிக்கறி

தேவையான பொருட்கள்

கறி - ½ கிலோ

நெய் - 100 கிராம்

தேங்காய் எண்ணெய் - 100கிராம்

ஏலக்காய் - 5 எண்ணம்

பட்டை, கிராம்பு     - தேவையான அளவு

கசகசா - 50 கிராம்(அரைத்து பால் எடுக்கவும்)

முந்திரிப் பருப்பு - 50 கிராம்

உள்ளி - 150 கிராம்

மிளகாய் - 25கிராம்

வாழைக்காய் - 2

தயிர் - 200

வத்தல் தூள் - 50 கி(ஒரு டேபிள் ஸ்பூன்)

மஞ்சள் தூள் - 50கி (1/2 டேபிள் ஸ்பூன்)

பெருஞ் சீரகம் - 10 கிராம் (1/4 டேபிள் ஸ்பூன்)

நச்சீரகம் - 10 கிராம் (1/2 டேபிள் ஸ்பூன்)

மல்லி தூள் - 10 கிராம் (1/2 டேபிள் ஸ்பூன்)

இஞ்சி - 50 கி (தேவையான அளவு)

பூண்டு - 50 கிராம்(தேவையான அளவு)

கருவேப்பிலை - தேவையான அளவு

தேங்காய் - ½ மூடி பால் எடுக்கவும்.

செய்முறை:

முதலில் அரைத்த இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலம், கருவேப்பிலை சிறிது தயிர் ஊற்றி கலக்கி வைக்கவும். சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு இஞ்சி பூண்டு, கருவேப்பிலை போடவும்.

பின்பு கறியை போடவும். சிறிது நேரம் கழித்து தயிர் ஊற்றவும். பிறகு மசாலா தூள் சாமான்களை போடவும். தேங்காய் பால், கசகசா பால், முந்திரி பருப்பு அரைத்து போடவும். பின்பு கறியை தம்மில்போட்டு இறக்கவும்.

( 23-11-2012 )