இணையதளம் பற்றி


வல்லமைசால் அல்லாஹ்விற்கே வழுத்தும் புகழ் அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ். அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபிநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வழிவந்தோர், வழிதொடர்வோர் அனைவர் மீதும் இறையருள் நிறையுமாக!

அஸ்ஸலாமு  அலைக்கும்

வங்கத்தின் கடல்அலைகள் முத்தும் பேரூர், வடிவான தமிழாடும் வண்ணத் தொட்டில், வரலாற்றில் வாழும் வாகையூர் காயல்பட்டினம்.

வளமோங்கிய வணிகத்தால், வாஞ்சைமிகு உதவிகளால், புகழோங்கித் திகழ்ந்த இப்பேரூரில், கற்றறிந்த சான்றோர்களும், கண்ணியத்திற்கு உரியோரும் வாழ்ந்து சிறந்துள்ளார்கள்.

போற்றுதலுக்குரிய அந்தப் பெருமக்கள் விட்டுச்சென்ற விழுமியங்களைப் பின்பற்றி, புதியவரலாறு படைக்கும் பொறுப்பும், கடமையும் நம் அனைவரின் இலட்சியமாகும்.

வரவேற்புக்குரிய அந்த இலட்சியத்தை இலக்காகக் கொண்டு, காயலில் மலர்ந்துள்ள www.kayalconnection.com எனும் இணையதளம் தனது பொதுப்பயணத்தை துவக்கியுள்ளது.

நம் தொட்டில் பிரதேசமான, அன்னையூர் காயலுக்கு அணிசேர்க்க, அதன் புகழை எட்டுதிக்கும் பரப்ப, காயலர் நலன்காக்க இவ்விணையதளம் பெரும் பணியாற்றும்.

நாகரீகத்தின் எல்லைக்கோட்டில் நின்று, நல்லவைகளை மட்டுமே இவ்விணையதளம் விதைக்கும். எவர்உள்ளமும் புண்படாது, இதயங்களை பண்படச் செய்யும் விதமாகவே இது கடமையாற்றும். நியாயங்களை காயப்படுத்தாமல் இது நடுநிலை நிற்கும்.

அரும்பியுள்ள இந்த இணையதளத்திற்கு அடித்தளமான வாசக நேயர்களே! உள்ளுரில், உள்நாட்டில், உலகெங்கில் வாழ்கின்ற காயலர்களே!  உரிமையுடன் வேண்டுகிறோம்.

தோழமை உணர்வோடுத் துணைபுரியுங்கள். பாங்குடன் பரிந்துரை செய்யுங்கள். கனிவுடன் கருத்துக்களைப் பதியுங்கள்.  தகவல்களைத் தாருங்கள். அன்புடன் வாழ்த்துங்கள். ஆதரவுக்கரம் நீட்டுங்கள். வளர்கிறோம். அதன் மூலம் இவ்வூர் புகழ் வளர எங்களை அர்ப்பணிக்கின்றோம். இன்ஷாஅல்லாஹ். நம் அனைவர் மீதும் நாயனருள் பொழியுமாக! ஆமீன்.

இவண் : ஹாஜி S. அக்பர்ஷா B.A.  - இணையதள நிறுவனர்

kayalconnection, Connecting kayalites - காயல் சங்கமம் இது காயலர் சங்கமம்