
ஐக்கிய அரபு அமீரகத்தின், துபையில் அமைந்து காயலின் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றும் பொதுமன்றமான, துபை காயல் நல மன்றத்தின் (Kayal Welfare Association, Dubai) 24வது ஆண்டு விழா மற்றும் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக் கூட்டம் எதிர் வரும் 30ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
துபை சத்வாவிலுள்ள அல்-ஸஃபா பூங்காவில் 2ஆம் எண் நுழைவாயில் அருகில் இக் கூட்டம் நடைபெறும்.
துபை, அமீரகங்களில் வசிக்கும்; மற்றும் வருகை தந்துள்ள காயலர்கள் அனைவரும் இக் கூட்டத்தில் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.
இவ்வழைப்பை துபை காயல் மன்றத்தின் செயலாளர் சகோதரர் யஹ்யா முஹ்யித்தீன் அவர்கள் விடுத்துள்ளார்.
தகவல்:
ஹாஜி ராவண்ணா அபுல்ஹஸன்