மஹ்லறா அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலவி அல்ஹாஜ் கலந்தர் மஸ்தான் ஆலிம் ரஹ்மானி அவர்கள் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து, மஹ்லறா அரபிக்கல்லூரியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
23-12-2012 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு துவங்கிய இக்கூட்டத்திற்கு, மஹ்லறா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி அல்ஹாஜ் அல்ஹாபிழ் அப்துர் ரஹ்மான் தங்கள் அஹ்ஸனி தலைமை ஏற்று உரையாற்றினார்.
மஹ்லறா கல்லூரியின் குர்ஆன் மக்தபின் ஆசிரியர் அல்ஹாபிழ் எஸ்.எம்.எஸ். தவ்ஹீத் இறைமறை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
மஹ்லறா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி எஸ்.டி. அம்ஜத் அலி ஆலிம் மஹ்லரி பைஜி,
முஹ்யித்தீன் பள்ளி இமாம் மௌலவி ஏ.கே. அபூமன்ஸூர் ஆலிம் மஹ்லரி,
மௌலவி கத்தீபு அஹ்மது அப்துல் காதிர் ஆலிம்,
குத்பா பெரிய பள்ளியின் கதீபு மௌலவி ஹைச்.ஏ. அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி,
மஹ்லறா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் ஏ.கே. முஹம்மது அஸ்பர் அஷ்ரஃபீ ஆலிம்,
ஜாவியா அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி கே.ஏ. காஜா முஹ்யித்தீன் காஸிபி,
மஹ்லறா அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி கே.எம். காஜா முஹ்யித்தீன் ஆலிம்,
குத்பா சிறிய பள்ளியின் கதீபு மௌலவி எஸ்.எம். முஹம்மது பாரூக் ஆலிம் ஃபாஸி,
மஹ்லறா அரபிக் கல்லூரி பேராசிரியர் என்.ஏ.ஜி. ஷேக் இஸ்மாயீல் ஆலிம் பைஜி,
மஹ்லறா அரபிக் கல்லூரி பேராசிரியர் என்.எஸ்.எம்.யாசர் அரஃபாத் மஹ்லரி,
மஹ்லறா அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி அஷ்ரப் அலி ஃபைஜி,
ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவன முதல்வர் நஹ்வி அல்ஹாஜ் ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கி,
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபூபக்கர்,
ஆகியோர் மறைந்த மஹ்லறா முதல்வர் மாபெரும் மார்க்க அறிஞர் மௌலவி கலந்தர் மஸ்தான் ஆலிம் அவர்களின் சன்மார்க்கப்பணி, சமுதாயத்திற்கு ஆற்றிய பணி, மஹ்லறாவின் வளர்ச்சிக்கு செய்த தியாகம், மாணவர்களிடத்தில் பழகிய பண்பு, ஆளுமை மிகுந்த பேச்சாற்றல், அற்புதமான அணுகுமுறை இவைகள் குறித்து மிக விளக்கமாக நினைவு கூர்ந்தார்கள்.
மேலும், அவர்களின் மறுஉலக மேன்மையான வாழ்விற்கும் துஆச் செய்தார்கள். மஹ்லறா நிர்வாகிகள், மாணவர்கள் நகரின் மார்க்க அறிஞர்கள், பொதுமக்கள் திரளாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
நிறைவாக மஹ்லறா அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி எம்.எஸ்.ஏ. செய்யிது முஹம்மது ஆலிம் மன்பஈ அவர்களின் துஆவுடன் இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
நிழற்படம் மற்றும் தகவல் உதவி: முதன்மை செய்தி முகவர்: kayalconnection.com