காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சார்ந்த ஹாஜி H M கியாது (சேட்) அவர்கள், 06-04-2018 வெள்ளிக்கிழமை இன்று நண்பகல் 12 .30 மணியளவில் சென்னையில் வைத்து வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் வயது சுமார் 75 .
அன்னார், மர்ஹூம் அல்ஹாஜ் S O ஹபீப் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி அஹ்மதுமுஸ்தாபா (பெரிய மைனர்) அவர்களின் மருமகனும்,
மர்ஹூம் அல்ஹாஜ் H M முஹம்மது லெப்பை, மர்ஹூம் அல்ஹாஜ் H M செய்த உமர், அல்ஹாஜ் H M செய்க் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி S.M உஜைர் அவர்களின் மைத்துனரும், A.M. ராபிக், A.M . முஹம்மது லெப்பை ஆகியோரின் மச்சானும், ஹாஜி M.S. செய்த உமர் அவர்களின் சகலையும், M L அம்ஜத் மற்றும் S ஷக்கீல் ஆகியோரின் மாமனாரும் ஆவார்கள்.
மர்ஹூம் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும் .
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .
கியாது சேட் அவர்களின் பிரிவின் தாக்கம் அவர்களின் ஜனாஸாவை பின்பற்றி சென்ற மக்கள் கடல் அலையென திரண்டு சென்ற போது தெரிந்தது. அவர்களை ஒரு நட்பு வட்டத்துக்குள் சென்று நலம் விஜாரித்துதான் எனக்கு பழக்கம்.
1960 – 70 களில் அரபுநாட்டு மோகத்தில் அலை அலையாக நமதூர் மக்கள் பம்பாய் சென்றபோது அவர்களுக்கெல்லாம் புகலிடம் கொடுத்தது மிர்சா வீதி 13 ம் இலக்கத்தின்கதவுகள் அவர்களுக்காக திறந்து கொடுத்தது பல்லாக் ஹவுஸ் பெயருடன் இயங்கி வந்த அந்த மாடியில் அரசாண்டு கொண்டிருந்தவர்கள் பி.ஏ.ஷேய்க் ஹாஜி என்ற பெருந்தகையும் கியாது சேட் என்ற ஒரு இளைஞரும்தான். பம்பாயிலிருந்து அரபு நாடு செல்வோருக்கு தங்கள் சொந்த பணத்தை அள்ளிக் கொடுத்து அற்புதமான யோசனைகளையும் சொல்லி வழியனுப்பியவர்களில் கியாத் சேட்டின் பங்கு ஷேக் சாஹிப் அவர்களின் பங்குக்கு சரி சமமாக இருந்திருக்கின்றது என்பதை வாழும் SMB ஏ ஆர் தாஹா அவர்களின் நினைவஞ்சலியின் மூலமும் ஆதம் சுல்தான் அவர்கள் இங்கே பதிவு செய்துள்ள நன்றிப் பெருக்கு மிக்க செய்தியும் மௌன சாட்சியாக இருக்கிறது.
நாம் எதை பிறருக்கு கொடுக்கிறோமோ அதுதான் நமக்கு உள்ளது நாம் எதை விட்டு செல்கிறோமோ அது பிறருக்குள்ளது என்று நபிகள் நாயம் சொன்னது எவ்வளவு சத்தியமானது. கியாத் சேட் அவர்கள் மீது மக்கள் வைத்திருந்த புரியாத பிரியம் அவர்கள் பிரியும்போது புரிந்தது.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக அவர்கள் பாவங்களை மன்னித்து அருள்வானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக.அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை.
பனிக்கும் கண்களுடன் அவர்கள் குடும்பத்தினர் துயரில் பங்கு கொள்ளும்
மக்கி நூஹுத்தம்பி & மக்கி ஆலிம்
குடும்பத்தினர்கள்..7530075337.
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،
وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،
فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!!
மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.
ஆதாரம் :- புகாரி -7377
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் – உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family.
Aameen!
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.