Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
09:14 am
Monday, 11 December 2017
Top

அமீரகத்தில் விருது பெற்ற இரு காயலர்கள்



அமீரகத்தில் உள்ள அஜ்மானில் Dear Health centre என்ற அமைப்பு சாதனையாளர்களை பாராட்டி ஊக்குவித்து வருகின்றது .

 

 

ஒவ்வொரு துறையிலும் சாதனைப் படைத்தோரை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் முகமாக விழா எடுத்து விருதுகளை வழங்கி வருகின்றனர் .

 

இவ்வாண்டு 28 தமிழர்களை இவ்வமைப்பு பல்வேறு துறைகளின் சாதனையாளர்களாக தேர்ந்தெடுத்து விருது வழங்கி  சிறப்பித்துள்ளது.

 

இந்த 28 நபர்களில் இருவர் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். இவ்விருவருக்கும் 11 -11 -2017 அன்று அஜ்மானில் க்ரோன் பேலஸ் ஹோட்டல் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

 

மவ்லவி காரி சுலைமான் மஹ்லரி

 

 

காயல்பட்டினத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞரான மவ்லவி காரி சுலைமான் மஹ்லரி அமீரகத்தில் பல்லாண்டு காலம் மார்க்க சேவை ஆற்றியதை பாராட்டும் முகமாக விருது வழங்கப்பட்டது .

 

புகைப் பட கலைஞர் சுபுஹான்

 

 

காயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்த புகைப் பட கலைஞர் சுபுஹான் அவர்களுக்கு best photography என்ற விருது இவ்விழாவில் வழங்கப்பட்டது .

 

 

இவ்விருதினை H.H. Sheikh Abdul Munaem Bin Nasser Al Nuaimi அவர்கள் வழங்கினார்கள் .

 

விருது பெற்ற காயலர் இருவருக்கும் ஏனைய சாதனையாளர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

நிலைப்படம் மற்றும் தகவல்: துணி உமர் அன்சாரி, அபுதாபி .

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


1 Comment to “அமீரகத்தில் விருது பெற்ற இரு காயலர்கள்”

  1. MACKIE NOOHUTHAMBI  , Sri Lanka    IP : 175 .  .  . 
    says:

    முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை….
    சிற்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை

    எங்கே நன்மை எங்கே நல்லது உண்டோ அவற்றை ரசிக்கும் பாராட்டும் தன்மை எல்லோருக்கும் வேண்டும். சுபுஹானி அவர்களின் நிழற்படங்கள் ஒரு திரைக் கதை ஒளிப்பதிவாளரிடம் இருந்தால் இவர் எப்போதே வெளிச்சத்துக்கு வந்திருப்பார்.

    சுலைமான் மௌலவி அவர்களும் அப்படித்தான். அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் குத்பா ஓத ஆரம்பித்தார்… எங்கேயோ கேட்ட குரல்… சிம்மக் குரல்…. அப்படியே எந்த குறிப்பும் இல்லாமல் அவர் ஓதி முடிக்கும் வரை மெய் சிலிர்த்து இருந்தேன்.

    எனக்கு வயதில் குறைந்தவர் என்றாலும் அவர் பெற்றோர் இந்த துறையில் பாண்டித்துவம் எல்லாம் இல்லாதவர்கள் என்றாலும் இவருடைய முன்னேற்றம் மின்னலை போன்று வேகமாக வந்து நம்மை ஒரு கணம் அசத்தி விட்டு போகும் அவரை பேட்டி கண்டு அவரை மனதார வாழ்த்திய போது அவர் என்னிடம் சொன்னார், மிக அடக்கத்துடன்…”உங்கள் எழுத்துக்கள் பேச்சுக்கள் மட்டும் என்ன சாதாரணமானதா… நான் அரபியில் சொல்கிறேன் நீங்கள் தமிழில் சொல்கிறீர்கள்”.என்றார். அட எனக்குள் இப்படி ஒரு பாண்டித்தியம் இருக்கிறதா என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.

    பாராட்டுக்கள் மனிதனுக்கு அவசியம் வேண்டும். அது கிரியா உக்கி CATALYST.என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நாம் தகுதி உள்ளவர்களை அந்த அந்த காலத்தில் பாராட்ட தவறியதால் அவர்கள் சோர்ந்து போய் சமுதாயத்தின் நீரோட்டத்திலிருந்து விலகி இருக்கிறார்கள். நபி தோழர்களை நபிகள் நாயகம் மனதார பாராட்டிய செய்திகள் இஸ்லாமிய நூல்களில் அறியக் கிடைக்கிறது.

    எனவே தகுதியானவர்களை பாராட்டுவோம். அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்போம். அவர்கள் நம்மைவிட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய ஆளுமையை போற்றுவோம். இந்த விருதுகளை பெற்ற சுபுஹான் புகைப் பட கலைஞருக்கும் சுலைமான் ஆலிம் அவர்களுக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களும் து ஆக்களும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2017 © kayalconnection.com
Facebook Twitter Google plus