

அன்பின் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேல்னிலைப்பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
இறையருளால், இம்மடல் தங்கள் யாவரையும் நற்சுகத்துடனும், தூய சிந்தனைகளுடனும் சந்திக்கட்டுமாக… ஆமீன்.
1979-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட நமது முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி கடந்த 37 ஆண்டுகளாக நமதூர் மக்களின் பேராதரவுடன் உலகக் கல்வியை சிறப்பான முறையில் மாணவர்களுக்கு வழங்கிவருவது நாம் யாவரும் அறிந்ததே.
இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இப்புனித தியாக திருநாளை முன்னிட்டு, தாயகம் வந்துள்ளதால், பள்ளி நிர்வாகம் வரும் 04-09-2017 திங்கட் கிழமை காலை இந்திய நேரப்படி 10:00 மணியளவில், பள்ளி அரங்கில் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
தாயகம் வந்துள்ள எமது பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் சிரமம் பாராது, விடுபடாமல் இந்நிகழ்வில் கலந்துக் கொள்ள வேண்டுகிறோம்.
வல்ல அல்லாஹ் நம் யாவரின் உளத்தூய்மையான நற்கருமங்களை ஏற்று, ஈருலக நற்பேறுகளை நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன்.
தகவல் : நிர்வாகி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேல்னிலைப்பள்ளி – காயல்பட்டணம்.
September 3rd, 2017