காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி S.D. ஷாஃபி அவர்கள், 02.08.2017 புதன்கிழமை இரவு 11 மணியளவில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் வயது 73.
அன்னார், மர்ஹூம் M.K.ஷெய்கு தாவூத் அவர்களின் மகனும், மர்ஹூம் ஞானி ஹபீப் முஹம்மது அவர்களின் மருமகனாரும், அல்ஹாபிழ் M.S.ஷெய்கு தாவூத் அவர்களின் தந்தையும்,
S.D.முஹம்மது ஸாலிஹ், ஹாஜி S.D.ஷெய்கு அப்துல் காதிர்,ஹாஜி S.D.ஷாஹுல் ஹமீது ,ஹாஜி S.D.முஹம்மது அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும்,
ஹாஜி ஆடிட்டர் S.அஹ்மது ரிஃபாய், மர்ஹூம் ஹாஃபிழ் M.I.முஹம்மது நூஹ்,ஹாஜி N.M.H.செய்யிது முஹம்மது புகாரீ, ஹாஜி சொளுக்கு முஹம்மது தம்பி ஆகியோரின் மாமனாருமான இவர்கள்
ஞானி H.M.அபுல்ஹஸன் ஷாதுலீ,ஞானி H.M. ஷாஹுல் ஹமீது , ஹாஜி ஞானி H.M. முஹம்மது முஹையதீன் , ஹாஜி ஞானி H.M..ஷெய்கு அப்துல் காதிர் ஆகியோரின் மச்சானுமாவார்கள்.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் 03.08.2017. வியாழக்கிழமை இன்று காலை 10.30 மணியளவில் , காயல்பட்டினம் மொகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன்.
தகவல்: அல்ஹாபிழ் N.T. சதக்கத்துல்லாஹ்