காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவன் S.Y. முஹம்மது அனஸ் , சென்னையில் உள்ள சூளைமேடு D.A.V. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் பயின்று, +2 வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 1200 க்கு 1157 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மர்ஹூம் செய்யது யூனுஸ் – ஜெமிலா மஜாஹிரா தம்பதியினரின் மகனாகிய இவர் , VT ஹாஜியாரின் பூட்டனும், ஆறாம் பள்ளி மர்ஹூம் தெனாலி இபுறாஹிம் மற்றும் VSA கிதுரு முஹம்மது ஆகியோரின் பேரனும் ஆவார் .
பாடவாரியாக இவரது மதிப்பெண்கள் விபரம்
தமிழ் -196 , ஆங்கிலம்-188 , இயற்பியல்-192, வேதியல் -192, உயிரியல் -194 , கணிதம் -195
சிறந்த மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ள இம்மாணவர் வருங்காலத்தில் உயர்வான நிலையை அடைய வாழ்த்துகிறோம்.
தகவல் : சென்னையில் இருந்து K.J. அஹமது முஹைதீன்