உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ துறை கூட்டமைப்பான ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்ட் சார்பில் (Generic Medical Shop) ”மக்கள் மருந்தகம்” திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது.
பொதுவாக மருந்துக் கடைகளில் ஆங்கில மருந்துகளை அதிக விலையில் வாங்க வேண்டிய இக்காலத்தில், மிக மிக மலிவான விலையில் தரமான மருந்துகளை வாங்கும் வகையில் மத்திய அரசின் மானிய திட்டத்தை பயன் படுத்தி ‘மக்கள் மருந்தகம்’ எனும் ஜெனிரிக் மருந்து கடையை, ஷிஃபா அறக்கட்டளை மூலம் கீழ்கண்ட நிகழ்வின் படி திறக்க பட உள்ளது என்ற அன்பான செய்தியை ஷிஃபாவின் நிர்வாகிகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் : 18.03.2017 சனிக்கிழமை
நேரம் : மாலை 5 மணியளவில்
நிகழ்விடம்: தாஹா காம்ப்ளக்ஸ், மெயின் ரோடு, காயல் பட்டணம்.
தலைமை : டாக்டர். முஹம்மது இத்ரீஸ்
(தலைவர் : ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்ட்.)
முன்னிலை: திரு. அனிதா R. ராதா கிருஷ்ணன் MLA,
( திருச்செந்தூர் சட்ட மன்ற தொகுதி)
மக்கள் மருந்தகத்தை திறந்து வைப்பவர் :
அல்ஹாஜ். K.A.M. முஹம்மது அபூபக்கர் MLA,
( கடையநல்லூர் சட்ட மன்ற தொகுதி )
முதல் விற்பனையை தொடங்கி வைப்பவர் : டாக்டர். முஹம்மது இத்ரீஸ்
(தலைவர் : ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்ட்.)
பொது மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து தருவதோடு; இம் மக்கள் மருந்தகத்தை பயன்படுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
தகவல் : நிர்வாகிகள், ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்ட், 6 – சதுக்கைத் தெரு, காயல் பட்டணம்.