காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை டைமண் அரங்கத்தில் முதலுதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
23-12-2012 அன்று காலை 10 மணிக்கு, இலண்டனில் உள்ள காயல் நலமன்றம் (Kayal Welfare Association of United Kingdom) இம்முகாமை நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு kayalconnection.com ஆலோசகர் ஹாஜி எஸ்.எம். உஜைர் தலைமை ஏற்று உரையாற்றினார்.
இலண்டன் காயல் நலமன்றத்தின் தலைவர் டாக்டர். எஸ்.ஓ. செய்யதகமது M.B., M.R.C.O.G., (U.K.) முன்னிலை வகித்து இம்முகாம் குறித்த அறிமுக உரையாற்றினார்.
எம்.எம். சாகுல்ஹமீது பி.எஸ்.சி. வரவேற்புரை ஆற்றினார்.
குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். எஸ்.எம்.அபுபக்கர் M.B.B.S., D.C.H., இதய நோய் நிபுணர் டாக்டர் பாதுஷா, குழந்தைநல டாக்டர் நந்தகுமார் ஆகிய மருத்துவர்கள் இம்முகாமில் பங்கேற்றார்கள்.
இவர்கள் முதலுதவியில் விழிப்புணர்வை உருவாக்கும் விதத்தில், செய்முறையில் (Demo) பொதுமக்களுக்கு விளக்கினார்கள். மேலும் முகாமில் பங்கேற்றோரின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்கள்.
திடீர் மயக்கம், வலிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படும்போதும், விபத்து ஏற்படும்போதும், கைகால்கள் முறியும் போதும் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி பற்றிய விபரங்கள் இச்செய்முறையில் இடம் பெற்றது.
இம்முகாமில், வாவு வஜீஹா கல்லூரியின் செயலாளர் முஹ்தஜீம், நகர் மன்ற உறுப்பினர்கள் ஏ.கே. முஹம்மது மெய்தீன், எம். ஜஹாங்கீர், சேக்னா(லயன்ஸ்), ஆசிரியர் அப்துர் ரஜாக் (காக்கும் கரங்கள்), வாவு சாகுல் ஹமீது, முஹம்மது மெய்தீன் (அல்-அமீன் மன்றம்) மருத்துமனை செவிலியர்கள், துளிர் பள்ளி ஆசிரியைகள், மற்றும் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
காக்கும் கரங்கள் அமைப்பைச் சார்ந்த ஆசிரியர் அப்துர் ரஜ்ஜாக் நன்றியுரை வழங்கியதோடு, இம்முகாமை அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் இடம்பெறச் செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். ஆவன செய்வதாக மன்ற அமைப்பாளர்கள் வாக்களித்தார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மன்றத்தின் செயலாளர் ஜே.கே. சாகுல்அமீது B.E.,M.B.A., பொருளாளர் குளம் முஹம்மது சதக்கத்துல்லாஹ் B.E. ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
கே.எம்.டி. மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீப் முகாம் சிறப்புற துணை புரிந்தார்.
முன்னதாக 22-12-2012 சனிக்கிழமை மாலை எல்.கே. மேநிலைப்பள்ளியிலும் மாணவர்களின் முன்னிலையில் இச்செய்முறை பயிற்சி முகாம் இடம் பெற்றது.
நிழற்படம் மற்றும் தகவல் உதவி: முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com