Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
07:53 am
Tuesday, 19 March 2024

ரியாத் காயல் மன்ற 53 ஆவது பொதுக்குழு நிகழ்வு



மிகுந்த உற்சாகத்துடன் நடந்தேறியது ரியாத் காயல் நலமன்றத்தின் 53வது பொதுக்குழு கூட்டம்

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ரியாத்காயல் நற்பணி மன்றத்தின் 53-வது குளிர்கால பொதுக்குழுக் கூட்டம்&குடும்ப சங்கம நிகழ்ச்சி கடந்த09-12-2016 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் இரவு 10.30 மணி வரைரியாத்(சுலை) EXIT 16-இல் அமைந்துள்ள இஸ்திராஹஅல்கும்மாவில் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது,அல்ஹம்துலில்லாஹ்.

 

வரவேற்பு:

 

 

காலை 09.00 மணியில் இருந்தே உறுப்பினர்கள் பத்ஹா – லக்கி மற்றும் R.T. ரெஸ்டாரண்ட் அருகில் வருகை தர, அங்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த வாகனத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்விடத்திற்கு அழைத்து வந்தனர், சொந்த வாகன வசதி உள்ளவர்கள் தமது நண்பர்களுடனும், குடும்பதாருடனும் முற்கூட்டியே வந்து சேர்ந்தனர்.

 

நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சுவைமிக்க தேநீர் மற்றும் சமூசா வழங்கி உபசரித்து அகமகிழ வரவேற்றனர்.வருகை தந்த உறுப்பினர்கள் அனைவரும் வருகை பதிவேட்டில் பதிவு செய்து சந்தா மற்றும் நன்கொடைகள்செலுத்தினார்கள். புதிதாக வந்துள்ளவர்கள் உறுப்பினர் படிவத்தினைநிரப்பிதங்களை இம்மன்றத்தில் உறுப்பினராக இணைத்து கொண்டார்கள்.

 

விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் தாங்கள் நடத்தவிருக்கும் போட்டிகளுக்கான ஆயத்த வேளைகளில் வெளியரங்க விளையாட்டு மைதானத்தில் தம்மை ஈடுபடுத்தி கொண்டனர்.

 

பறந்து விரிந்த ரியாத் நகரில் பணிபுரியும் காயலர்கள் இந்த சங்கமத்தின் மூலம் சந்தித்து கொண்ட தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அகமகிழ்வுடன் உரையாடி நலம்விசாரித்துகொண்டிருந்தனர். சிறுவர் சிறுமியர் தமது நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்தனர்.ஜும்ஆவுடையே நேரம் நெருங்கியதும் அனைவரும் அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று குத்பா உரையில் கலந்து கொண்டு ஜும்ஆதொழுகையை நிறைவேற்றினர்.

 

 

 

பொதுக்குழு கூட்டம்:

 

மன்ற 53-வது பொதுக்குழுக் கூட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு துவங்கியது. நிகழ்ச்சிகளை சகோதரர் ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் தொகுத்தளித்தார்.மன்ற உறுப்பினர் சகோ. ஷாதுலி அவர்களின் மகன் அல்-ஹாஃபில் S. தாவூத் இறைமறை ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கிவைத்தார்.தொடர்ந்து மன்ற பாடகர் சகோ. சேக் அப்துல் காதர் அவர்கள் இன்னிசை விருந்தளித்தார்.

 

தலைமை உரை:

 

நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற என்மன்ற தலைவர் சகோதரர் நூஹு அவர்கள்அனைவரையும் அகமகிழ்வோடு வரவேற்றார்.உறுப்பினர்களின் நீண்ட கால கோரிக்கையினை ஏற்று இந்த பொதுக்குழு கூட்டம் இஸ்திராஹவில் குடும்ப சங்கம நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டது என்றும்,

 

இக்கூட்டம் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டுமுயற்சி, பொதுக்குழு உறுப்பினர்களின் தன்னார்வ செயல்பாடு மற்றும் பெண்களின் அளப்பெரும் பங்களிப்போடு சிறப்பாக நடைபெற்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.

 

இம்மன்றத்தின் செயல்பாடுகளை பெண்களும் அறிந்துகொள்வதற்காகவே இந்த குடும்ப சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்/சிறுமியர்களும் மன்ற நல உதவிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கிடும் முகமாக கடந்த செயற்குழுவில் துவக்கிவைக்கப்பட்ட Women And Kids Fund (WAKF) திட்டத்தை பற்றி உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தார்.

 

இத்திட்டத்தின் மூலம் விருப்பம் உள்ள உறுப்பினர்களுக்கு மன்றம் சார்பாக உண்டியல் வழங்கப்படும் என்றும், வருடத்திருக்கு ஒருமுறை அவர்களிடம் இருந்து உண்டியலை பெற்று அதன் மூலம் பெறப்படும் நிதியினை நகரில் பிரத்யேக திட்டம் செயல்படுத்த பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.

 

 

 

மன்ற செயல்பாடுகள்:

 

மன்றத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோ. நுஸ்கி அவர்கள் மன்ற செயல்பாடுகளை பற்றி விளக்கி பேசினார். மன்றம் துவங்கப்பட்ட 1995-ம் ஆண்டு முதல் இன்று வரை வழங்கப்பட்ட நிதி உதவிகளுக்கு உறுப்பினர்கள் அனைவரின் ஈடுபாடே காரணம் என்றார். வெளியூர் சகோதர்கள் பலரும் எமது மன்றத்தில் இணைந்து செயல்படுவதாக கூறினார்.

 

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமானஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம், பெருநாளன்று இரவு நாட்டுக் கோழி வழங்கிடும் திட்டம், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும்அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம், இமாம் மற்றும் முஅத்தீன்களுக்கு நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ்ஜுபெருநாளில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்,

 

உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் துவக்கப் பள்ளிகளுக்குஉதவும் Kayal Primary Schools Welfare Projects, ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விளக்கமளித்தார்.

 

இவ்வனைத்து திட்டங்களையும் காயலில் இருந்து சிறப்பாகசெயல்படுத்திவரும் எம்மன்றஉள்ளூர் பிரதிநிதி சகோ. தர்வேஷ் அவர்களுக்குமன்றம் சார்பாக நன்றிதெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மற்றும் பாடலை சகோ. சேக் அப்துல்லாஹ் அவர்கள் வழங்கினார்கள்.

 

 

இரங்கல்:

 

மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி J ஜெயலலிதா அவர்களுக்கு மன்றத்தின் சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

  

ஆலோசனை:

 

மன்ற ஆலோசகர் கூஸ் முஹம்மது அபூபக்கர் அவர்கள், மன்றத்தின் செயல்திட்டங்கள் விரிவடைய அனைத்து உறுப்பினர்களின்ஈடுபாடும் அவசியம் என வேண்டினார். நாம் நல்ல நிலை அடையும் போது நமது வெற்றிக்கு உறுதுணை புரிந்தவர்களை என்றும் மறக்ககூடாது என்று அறிவுறுத்தினார்.

 

நகரில் இருந்து பலர் வேலை தேடி புதிதாக வந்துள்ளார்கள் என்றும், அவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்க மற்ற உறுப்பினர்கள் வழிகாட்ட வேண்டும் என்றும் கூறினார்.

 

கருத்துரை:

 

கருத்துரை வழங்கியஆலோசனைக்குழுஉறுப்பினர் சகோ. ஹைதர் அலி அவர்கள், பல புது முகங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

 

மேலும் தனது உரையில் மறைந்த தமிழக முதல்வர் செல்வி J ஜெயலலிதா அவர்கள் நமது சமுதாயத்திற்கு ஆற்றிய நல்ல பல செயல்திட்டங்களை பற்றி விளக்கி கூறினார். நகரில் கடந்த வருடம் அசாதாரண சூழல் நிலவிய போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுத்திட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்ததை நினைவு கூறினார்.

 

அதிகாரம், அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு எவ்வளவு தான் இருந்தாலும் அத்தனையையும் அநாதையாக்கி விட்டு, ஆளை மட்டும் தனியே அழைத்துச் சென்று விடுவது தான்மரணத்தின்சிறப்பு. என்னதான்அதி நவீன மருத்துவ வசதிகளும், உலகத்தரம் வாய்ந்த சிறப்பு மருத்துவர்களும் கொண்ட மருத்துவமனையாகஇருந்தாலும்நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களைவந்தடைந்தே தீரும்.

 

உறுதியான (பாதுகாப்பு மிக்க) கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே. (அல்குர்ஆன் 4:78). அவ்வாறான மரணம் நிகழும் முன் நாம் செய்ய வேண்டிய மூன்று கடமைகள் உள்ளன இறைவனுக்கு செய்யும் கடமை, சக மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் செய்யும் கடமை, நமக்கு நாமே செய்யும் கடமை, இதில் சக மனிதர்களுக்கு செய்யவேண்டிய கடமையை தான் நாம் அனைவரும் ஒன்றிணைந்து RKWA மூலம் செய்து கொண்டு இருக்கின்றோம் என்று கூறினார்.

 

தொடர்ந்து சதக்காவின் நன்மைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். நம்மால் இயன்ற அளவு ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிதல் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

உறுப்பினர்கள் கருத்து:

 

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் இந்த குடும்ப சங்கமம் நிகழ்ச்சியை சிறப்பாகே ஏற்பாடு செய்து தங்களை கூட்டத்திற்கு அழைத்தமைக்கு நன்றி கூறி, தங்களுடையகருத்துக்களையும் மேலான ஆலோசனைகளையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

குறிப்பாக லால் பேட்டையை சார்ந்த சகோ. நாசர் அவர்கள் கூறுகையில் RKWA-வில் தான் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருப்பதாகவும், அதன் செயல்பாடுகள் மிகவும் திருப்தியாக உள்ளது என்று கூறினார்.

 

காயல் களரி சாப்பாடு:

 

 

மதிய உணவாக காயல் பாரம்பரியமிக்க சுவைமிகு களறி கறி, கத்தரிக்கா மாங்கா புளியாணம் பரிமாறப்பட்டது. இச்சுவைமிக்க களரி சாப்பாடு சகோ. நுஸ்கி தலைமையில்ரியாத் ETA குழும சமையல் வல்லுனர்கள் சிறப்புற தயார் செய்திருந்தனர்.

 

விளையாட்டு போட்டிகள்:

 

 

 

அஸர் தொழுகை கூட்டாக நிறைவேற்றிய பின் அனைவருக்கும் தேநீருடன் வடை மற்றும் உளுந்தவடை பரிமாறப்பட்டது. தொடர்ந்து வெளியரங்க விளையாட்டு போட்டிகள் மைதானத்தில் உறுப்பினர்களின் ஆரவாரத்துடன் ஆரம்பமானது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும்போட்டிகளில் கலந்துகொண்டனர்.

 

போட்டிக்கான ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கபட்ட குழுவினர் சிறப்பாகசெய்திருந்தனர்.

 

டை பிரேகர்(Tie Breaker) போட்டி:

 

பெரியவர்களுக்குவெளி விளையாட்டரங்கில், கால்பந்து டை-பிரேகர்போட்டி8 குழுக்களாக பிரிக்கப்பட்டுRKWA-வின் நல திட்டங்களான Education, Small Sale, Medical, Ramadan Food Packet Program (RFPP), Monthly Food Packet Program (MFPP), Women And Kids Fund (WAKF), Cut-Off மற்றும் Primary School Welfare Project (PSWP) ஆகியவை குழுக்களுக்கு பெயராக சூட்டப்பட்டு மிகுந்த உற்சாகத்துடன் கால்பந்து வீரர்கள் கலந்து கொள்ள போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.

 

POOL – A & POOL – B என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு League முறையில் போட்டிகள் நடத்தப்பட்டது.டை-பிரேகர் வெற்றியை Medical அணிதட்டிச்சென்றது, இரண்டாம் இடத்தை Small Scale அணிதட்டிச்சென்றது.

 

 

 

லெமன் அண்ட் ஸ்பூன்:

 

இளைஞர்களும் பெரியவர்களும் மிகவும் குதூகலமாககலந்து கொண்ட லெமன் அண்ட் ஸ்பூன் (Lemon and Spoon) போட்டி ஆறு பிரிவிகளாக நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவில் இருந்தும் இரண்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் சுற்று வெற்றியாளர்கள் அனைவருக்கும் இறுதி சுற்றி நடத்தப்பட்டு மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

சாக்கோட்டம்:

 

தமது இரண்டு கால்களையும் சாக்கினுள் நுழைத்து கொண்டு துள்ளி குதித்தோடும் சாக்கோட்டம் எனும் சாக்குப்போட்டியில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பல பிரிவிகளாக நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் இரண்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

முதல் சுற்று வெற்றியாளர்கள் அனைவருக்கும் இறுதி சுற்றி நடத்தப்பட்டு மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இலக்கை விரைந்து சென்றடைய ஆர்வமுடன் வேகமாக சென்ற சிலர் நிலை தடுமாறி பாதியிலேயே விழுந்துவிட்டனர்.

 

பலூன் உடைத்தல்:

 

மஃக்ரிப் தொழுகை கூட்டாக நிறைவேற்றிய பின் வழமையான உற்ச்சாகத்துடன் பலூன் உடைத்தல் போட்டி நடைபெற்றது.போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் தமது பலூனை பாதுகாப்பதிலும் மற்றவர்களின் பலூனை உடைப்பதிலும் முனைப்பாக இருந்தனர். பார்வையாளர்கள் கரகோசம் எழுப்பி வீரர்களை உற்ச்சாக படுத்தினார்கள்.

 

சிறுவர் போட்டிகள்:

 

மறுபுறம், சிறுவர்களுக்கான விளையாட்டுபோட்டிகள் நடைபெற்றது. லெமன் அண்ட் ஸ்பூன், Spieling Genius மற்றும் Brain Smart ஆகிய போட்டிகளில் சிறுவர்கள் மிகுந்த சந்தோசத்துடனும் சுறுசுறுப்புடனும் கலந்துகொண்டனர்.சிறுவர்களுக்கான அனைத்து போட்டிகளையும் சகோ. ஆதில் மற்றும் சகோ. இஸ்மத் ஆகியோர் முன்னின்றுஅழகுறநடத்தினர்.

 

பெண்கள்/சிறுமியருக்கான போட்டி:

 

பெண்களுக்காக பிரத்யேகமாக அமைந்துள்ள உள்ளரங்கில் பெண்கள் மற்றும் சிறுமியருக்கானவிளையாட்டுப் போட்டிகள்சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டிகளை சகோதரிகள்அருமையாக நடத்தினர்.

 

விளையாட்டு போட்டிகள் அனைத்தும் இனிதாக நிறைவுற்ற பின் கூட்டாக இஷா தொழுகை நிறைவேற்றப்பட்டது.

 

உறுப்பினர்கள் அறிமுகம்:

 

இப்பொதுக்குழுவில் கலந்து கொண்டஉறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வந்து தங்களை சுய அறிமுகம் செய்து கொண்டனர்.

 

இதில் குறிப்பாக தம்மாம் மற்றும் ஜித்தாவில் இருந்து வந்து எமது பொதுக்குழுவில் கலந்து கொண்ட காயலர்கள் காலை முதல் இரவு வரை நடைபெற்ற எல்லாவித நிகழ்வுகளையும்பார்த்து ரசித்தும், நடைபெற்ற அனைத்து விளையாட்டு போட்டிகளில் தாங்களும் கலந்து கொண்டதாகவும் மேலும் இம்மன்றத்தின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியது என்றும் எடுத்துரைத்தனர்.இந்த நிகழ்ச்சியை சகோ. ஹைதர் அலி அவர்கள் வழிநடத்திநெறிபடுத்தினார்.

 

மன்ற உறுப்பினர் சகோ. ஜைனுல் ஆப்தீன் அவர்கள் ஒரு இனிமையான இஸ்லாமிய இன்னிசை கீதம் பாடினார், தொடர்ந்து சகோ. சேக் அப்துல்லாஹ் அவர்கள் ஒரு அருமையான நகைச்சுவை கலந்த பாடல் ஒன்றை பாடி அனைவரையும் உற்சாகம் ஊட்டினார்.

 

மன்ற உறுப்பினர் சகோ. ஷாதுலி அவர்களின் மகன் அல்-ஹாஃபில் தாவூத் மற்றும் மன்ற உறுப்பினர் சகோ. M.A.C. அஹமத் தாஹிர் தங்களது இனிய குரலில் கிராஅத் ஓதி அனைவரயும் உள்ளம் குளிரச் செய்தனர்.

 

 

தங்க நாணயம்:

 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வருகையை பதியும் போது டோக்கன் வழங்கப்பட்டது. இறுதியாக குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு தங்க காசுகள் (ஆண்கள் பகுதிக்கு இரண்டு, பெண்கள் பகுதிக்கு இரண்டு) வழங்கப்பட்டது.

 

சகோ. P.M.S. முஹம்மது லெப்பை, சகோ. வெள்ளி முஹம்மது அலி ஆகியோர் ஆண்கள் பகுதியிலும், சகோ. ஆதில் அவர்களின் துணைவியார் மற்றும் சகோ. நூஹு அவர்களின் துணைவியார் ஆகியோர் பெண்கள் பகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

பரிசளிப்பு விழா:

 

 

போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுமியருக்கான பரிசளிப்பு விழா உள்ளரங்கில் தனியாக நடைபெற்றது.கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மன்ற நிர்வாகிகள் மற்றும் மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

 

 

 

நன்றியுரை:

 

குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த இனிய பொதுக்குழு கூட்டத்தை சீரிய முறையில் நடத்த அருள்புரிந்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

 

நிகழ்ச்சி ஏற்பாடு செய்த செயற்குழு/பொதுகுழு உறுப்பினர்கள்,பெண்கள் நிகழ்சிகளை ஒருங்கிணைத்த சகோதரிகள்,உணவு, குடிநீர், தேநீர் மற்றும் சிற்றுண்டி, பரிசுப்பொருட்கள், இஸ்திராஹா இவைகளுக்குதாரளமாக அனுசரணை வழங்கிய நண்பர்களுக்கும், வாகன உதவி செய்தவர்களுக்கும், தம்மாம் மற்றும் ஜித்தாவிலிருந்து வந்து கலந்துகொண்ட அனைவர்களுக்கும் சகோ.செய்யது இஸ்மாயில் தனது நன்றி கலந்தபாராட்டுக்களை கூறி நிறைவு செய்தார்.

 

இரவு உணவு:

 

இரவு உணவாக நாட்டுக்கோழி கறியுடன் பரோட்டா, இடியாப்பம், சப்பாத்தி மற்றும் சவ்வருசி பரிமாறப்பட்டது. இச்சுவைமிக்க உணவினை சகோ. நுஸ்கி தலைமையில்ரியாத் ETA குழும சமையல் வல்லுனர்கள் சிறப்புற தயார் செய்திருந்தனர்.

 

வினாடி வினா போட்டி:

 

சகோ. அப்துல்லாஹ் அவர்கள் ஏற்பாட்டில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பண முடிப்பினை சகோ. அப்துல்லாஹ் அவர்கள் தனது அனுசரணையில் வழங்கினார்.

 

 

 

பிரார்த்தனை:

 

சகோ.ஜைனுல் ஆப்தீன் பிரார்த்திக்க ‘துஆ’ கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

 

மேலதிக புகைப்படங்களை காண கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்

 

https://goo.gl/photos/DkKVNZQLD7rQD5a96

 

செய்தியாக்கம் – தைக்காஸாஹிப்

 

புகைப்பட உதவி – இளவல்ஆதில்

தகவல்:  Mohamed Hassan