Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
11:58 am
Sunday, 16 December 2018
Top

வாழ்க புரட்சித் தலைவியின் புகழ்



 

மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், 5 -12 -2016 திங்கட்கிழமை இரவு 11 .30 மணியளவில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைத்து காலமானார் .

 

 

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக பல்லாண்டுகாலம் சிறப்புடன் செயலாற்றி , அந்த இயக்கத்திற்கு ஒரு உறுதி வாய்ந்த அரணாக திகழ்ந்தார்.

 

மாநிலங்களவை உறுப்பினர் , எதிர்கட்சித் தலைவர் , முதலமைச்சர் என்ற பொறுப்புக்களை படிப்படியாக அடைந்து, ஆளுமைத் திறனோடு தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட மகத்தான தலைவராக அவர் விளங்கினார்  .

 

பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டில் அவர் காட்டிய அசாத்திய துணிச்சலால், சமூக நீதி காத்த வீராங்கனை என்ற சிறப்பான பெயரை தந்தை பெரியாரின் சீடரான திரு வீரமணி அவர்களிடமிருந்து அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மாநில உரிமைகளுக்காக அயராது போராடி மதிப்புயர் வெற்றிகளை ஈட்டினார். தாய் மொழியான தமிழுடன் ஆங்கிலம் இந்தி கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளையும் தெரிந்த முதல்வர், சிறந்த புத்தக வாசிப்பாளாராகவும் மிளிர்ந்தார் .

 

கந்து வட்டி கொடுமையை ஒழித்து லாட்டரி சீட்டை தடை  செய்து  ஏழை நடுத்தர மக்களுக்கு உதவிப் புரிந்த முதல்வர்  , சட்டம் ஒழுங்கை சீராக காப்பாற்றியவர் என்ற நற்சான்றிதழைப் பெற்றார்  

 

மக்கள் நலத் திட்டங்களை அம்மா திட்டங்கள் எனும் பெயரில் அறிமுகப் படுத்தி, வரியவர்கள்  , குறிப்பாக தாய்மார்கள் இதயங்களை தொட்டார்.

 

காயல் நகர மக்களுக்கு இவரது ஆட்சியில் பல்வேறு குறிப்பிடத்தக்க திட்டங்கள் வந்தடைந்தன என்பதை நன்றியுடன் நினைவுக் கூறுவோம்.

 

துணிச்சல் , விடா முயற்சி , எதிர்ப்புகளை சந்திக்கும் மன உறுதி இவைகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் புகழ் தமிழக அரசியல் வரலாற்றில் நீடித்து நிலை பெற்றிருக்கும்

 

புரட்சித் தலைவி என அன்புடன் அழைக்கப்பெற்ற அவர் , தமிழ் மண்ணில் விதைத்த புரட்சி விதைகள் விருட்சங்களாய் ஓங்கட்டும்!

 

மாண்புமிகு முதல்வரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் , அவரது பிரிவால் துயர் அடையும் அனைவருக்கும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறோம். வாழ்க புரட்சித் தலைவியின் புகழ் !

 

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


1 Comment to “வாழ்க புரட்சித் தலைவியின் புகழ்”

  1. mackie noohuthambi  , Cambodia    IP : 163 .  .  . 
    says:

    உங்களில் ஒருவர் மறைந்து விட்டால் அவரின் நன்மைகளை மட்டுமே பேசுங்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் சொல்கிறார்கள்.

    முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வெற்றி சரித்திரம் ஒரு அற்புதமான முன்னுதாரணம். யார் என்ன சொன்னாலும் தான் கொண்ட கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர். ஒரு முடிவு எடுத்து விட்டால் முன் வைத்த காலை பின் வைக்காதவர்.அதனால் ஏற்படும் பின்விளைவுகளை துணிச்சலுடன் சந்தித்தவர். தமிழகத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் எந்த திட்டத்துக்கும் அவர் தனது எதிர்ப்பை துணிச்சலுடன் பதிவு செய்பவர். அது அண்டை மாநில அரசாக இருந்தாலும் மத்திய அரசாக இருந்தாலும் சரியே. அதற்காக நீதிமன்றங்களுக்கு சென்று வெற்றி வாகை சூடியவர். தனது தனிப் பட்ட வழக்குகளிலும் சாதுரியமாக வாதாடும் திறமை பெற்ற வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு அங்கும் முத்திரை பதித்தவர். எதிர்க் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். மக்கள் தன் பக்கம் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று வியூகம் வகுத்து அவற்றை செயல்படுத்தியவர். மக்களுக்காக நான் என்று அவர் சொல்வதில் ஒரு அர்த்தத்தையும் யதார்த்தத்தையும் உண்டாக்கியவர்.

    ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவர் பிரச்சினைகளுக்கு தீர்வு அதை துணிச்சலுடன் எதிர்கொள்வதே என்பதை நிரூபித்துக் காட்டியவர்.

    நீ எழுந்து நடந்தால் எரி மலையும் உனக்கு வழி கொடுக்கும். நீ விழுந்து கிடந்தால் சிலந்தி வலையும் உன்னை சிறைபிடிக்கும் என்பதையும் நமக்கு பாடமாக தந்தவர்.

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.

    இன்று இந்த நாடே இவரை பற்றி சொல்கிறது. கட்சி உணர்வுகளுக்கு அப்பால் நின்று சிந்திப்பவர்கள் சொல்கிறார்கள்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2018 © kayalconnection.com