எல்.கே மெட்ரிக்குலேஷன் பள்ளியின் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் அண்மையில் தொடங்கபட்டது குறித்து பள்ளியின் முதல்வர் திருமதி. மீனா சேகர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
காயல்பட்டினம் எல்.கே. மெட்ரிக்குலேஷன் பள்ளியின் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள வலைதளம் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம்.
எமது பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஹாஜி. S. அக்பர் ஷா, அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ‘தொடர் முன்னேற்றம்’ என்னும் உயரிய நோக்கத்தை கொண்டு எமது பள்ளி செயல்படுகின்றது என்பதை தாங்கள் அறிவீர்கள்.
அதன் தொடர்ச்சியாக இந்த இணையதளத்தின் மூலம் மாணவ – மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் காயல் நகர மக்கள் பள்ளியின் செய்திகள், நிகழ்ச்சிகள், புகைப்படங்கள் மற்றும் பள்ளியின் அன்றாட நிகழ்வுகளை மிக விரைவாக அறிந்து கொள்ள முடியும்.
எமது பள்ளியின் புதிய இணையதள முகவரி: www.lkmatric.com
முகநூல் (facebook) முகவரி: www.facebook.com/lkmatric
ட்விட்டர் (Twitter) முகவரி: www.twitter.com/lkmatric
கூகுள் பிளஸ் (google +) முகவரி: https://plus.google.com/+
மேற்குறிப்பிட்ட எமது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் உங்களது விருப்பதை, ஆலோசனைகளை மற்றும் கருத்துக்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தகவல்: பள்ளி நிர்வாகம்