காயல்பட்டிணம், வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் 27.10.16 அன்று காலை 11 மணியளவில் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
31.10.16 சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கினைப்பாளரின் அறிவுரையின்படி அத்தினத்தில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை ஏற்றனர்.
அந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜெ. எல்லோரா எம்.காம்., எம்ஃபில்., பி.எச்.டி உறுதிமொழி கூற தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் விளம்பர பதாகைகளை ஏந்திய வண்ணம் மாணவிகள் அதை பின் மொழிந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களாக பேராசிரியை க. பாலஈஸ்வரி எம்.ஏ., எம்ஃபில்., மற்றும் பேராசிரியை சு. ராதா எம்.ஏ., எம்ஃபில்., ஆகியோர் செய்திருந்தினர்.
நிலைப்படம் மற்றும் தகவல்: கல்லூரி நிர்வாகம்