9-வது பொதுக்குழு ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயலர்களுக்கு அழைப்பறிக்கை!!!
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 04ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, நமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 9-வது பொதுக்குழு கூட்டம் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.
அபூதபீ காயல் நல மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அபூதபீ வாழ் காயல் சகோதர சகோதரிகள் அனைவரும் இச்செய்தியினை அழைப்பிதழாக ஏற்றுக்கொண்டு தங்கள் குடும்ப சகிதம் கூட்ட நிகழ்விடத்திற்கு முற்கூட்டியே அவசியம் வருகை தந்துசிறப்பித்து, தங்களின் உயர்ந்த ஆலோசனைகளையும் நமது காயல் மாநகரின் முன்னேற்றத்திற்கு தேவையான நல்ல பலகருத்துகளையும் தர அன்புடன் அழைக்கின்றோம்.
கூட்ட நிகழ்முறை விபரங்கள்:-
நேரம்: காலை 10 : 00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
இடம்: பழைய ஏர்போர்ட் ரோடு, K.F.C.பார்க் [அல்-நூர் மருத்துவமனை அருகில்] அபூதபீ.
குறிப்பு: ஜும்ஆ தொழுகைக்குப் பின் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை சிறந்த முறையில் செய்திடத்தோதுவாக தங்களின் வருகையை, ஜனாப் ஹுபைப் 050 – 8490 978, DR. செய்யித் அஹ்மத் 050 9450 404 ஆகியோருள் ஒருவரிடம்முற்கூட்டியே பதிவு செய்துகொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
தகவல்: நிர்வாக குழு மற்றும் பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், அபூதபீ கா.ந.மன்றம் -ஐக்கிய அரபு அமீரகம்