காயல்பட்டினம் தைக்காத்தெருவைச் சார்ந்த எம்.ஓ. அஜீஜா அவர்கள் 21-12-2012 இரவு 8.45 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
மர்ஹும் ஊண்டி முஹம்மது உமர் அவர்களின் மகளும், மர்ஹும் எம்.ஹைச். சாகுல் ஹமீது அவர்களின் துணைவியும் ஆவார்கள்.
ஹைச். முஹம்மது ஹஸன் அவர்களின் தாயாரான இவர், மர்ஹும் எம்.ஓ. முகைதீன், மர்ஹும் அப்துல் ஹலீம், மற்றும் எம்.ஓ. புகாரி, எம்.ஓ. செய்யதகமது ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா 22-12-2012 சனிக்கிழமை மாலை, புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹும் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியை வழங்கி அருள்வானாக. ஆமீன்.